
திருநெல்வேலி – திருச்செந்தூர், திருச்செந்தூர் – திருநெல்வேலி உள்ளிட்ட 4 பயணிகள் ரயில் சேவையை தற்காலிமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிப்ரவரி 3ம் தேதி முதல் மார்ச் மாதம் 31ம் தேதி வரை (வண்டி எண் 56035) திருநெல்வேலி திருச்செந்தூர், (வண்டி எண் 56036) திருச்செந்தூர் திருநெல்வேலி, (வண்டி எண் 56741)தூத்துக்குடி திருநெல்வேலி, வண்டி எண் (56742) திருநெல்வேலி திருச்செந்தூர் ஆகிய பயணிகள் ரயில் சேவை தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிடப்பட்டுள்ளது.



