ஜூலை 20ல் அத்தி வரதரை தரிசிக்க ஆளுநர் வருகிறார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

Kanchipuram athivarathar utsava - 2026

காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜூலை மாதம் 20ஆம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி துவங்குகிறது! இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

சாதாரண பக்தர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த நிகழ்வுக்கு வருகை தர உள்ளனர்!

இந் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜூலை மாதம் 20ஆம் தேதி அதிபர் அவரை தரிசிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது! ஆளுநர் தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.