‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் உள்ள நடிகைக்கு போலீஸார் சம்மன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

meeramithun biggboss - 2026

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (பிக் பாஸ்) பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ரூ 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

meeramitun - 2026இந்நிலையில் இந்த சம்மனுக்கு பதில் அளித்துள்ள மீரா மிதுன், நிகழ்ச்சி முடிந்த பின்னர் விசாரணைக்கு தாம் ஆஜராவதாக விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, மீரா மிதுன் அழகிப் போட்டி நடத்தப் போவதாகக் கூறி சென்னையில் நிகழ்ச்சி நடத்த இருந்த நேரத்தில் புகார் அளிக்கப் பட்டு, நிகழ்ச்சி நின்று போனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் மீரா மிதுன் தன்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்த புகார் தொடர்பான விசாரணைக்கு மீரா மிதுன் வராமல், தொடர்ந்து அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கடைசியாக தேனாம்பேட்டை போலீசார் கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் அப்போதும் ஆஜராகாத நிலையில், மீரா மிதுன் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.