அள்ளிட்டு போயிடும் குட்டீஸ் எல்லாம்.. தர்பூசணி ஜெல்லி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Watermelon - 2026

தர்பூசணி ஜெல்லி

தேவையான பொருட்கள்

தர்பூசணி சாறு. 2 கப்
ஜெலட்டின். 1.5 டேபிள் ஸ்பூன்
தேன். 1 டேபிள் ஸ்பூன்
சப்ஜா விதை. 1 ஸ்பூன்
பன்னீர். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஜெலட்டின் முதலில் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள், அதன்மேல் ஜெலட்டின் கிண்ணத்தை வைத்து நன்றாக கரையும் வரை கலக்குங்கள்.(டபுள் பாய்லர் மெதட்)
இப்பொழுது தர்பூசணி ஜூஸை ஒரு பேனில் போட்டு அதனோடு தேன் சேர்த்து பின்னர் அதில் செய்து வைத்திருந்த ஜெலட்டின் சேர்த்து வெதுவெதுப்பான உடன் அடுப்பை அணையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான மோடில் இந்த கலவையை ஊற்றி அதன்மேல் சப்ஜா விதையை சேர்த்து, குறைந்தது அரை மணி நேரம் வெளியே வைக்கவும் பின்னர் அரைமணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.