December 12, 2025, 12:01 AM
25.5 C
Chennai

ராமலிங்கம் கொலை வழக்கு! தென்காசியில் என்.ஐ.ஏ., சோதனை!

tenkasi nia search - 2025

திருபுவனம் பாமக., முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப் பட்ட வழக்கில் தொடர்புடையதாக, தென்காசியைச் சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்று கடந்த மாதம் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இன்று தென்காசியில் உள்ள அவரது வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தாம் வேலைக்கு ஆட்களை அழைக்கச் சென்ற இடத்தில், இஸ்லாமியர்கள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டபோது, அவர்களைத் தடுத்ததாலும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும் அவர் படுகொலை செய்யப் பட்டதாகக் கூறப் பட்டது.

இந்தப் படுகொலை வழக்கு தொடர்பாக, திருமங்கலக்குடி நிஜாம் அலி (வயது33), முகமது பர்வீஸ்(26), முகமது தவ்பிக்(29), திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த சர்புதீன்(60), முகமது ரியாஸ்(60), முகமது அசாருதீன்(24), முகமது ரிஸ்வான், ஆவணியாபுரத்தை சேர்ந்த தவ்ஹீத் பாட்சா(26), தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த முகமது இப்ராகிம்(47) உள்பட 11 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமைப்பு தொடர்பு இருப்பதாக அறியப் பட்டதால், கடந்த கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் சூப்பிரண்டு சவுக்கத் அலி தலைமையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் குழு திருபுவனம் வந்து இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தியது.

nia official investigate tenkasi based shale - 2025
NIA arrests Shali @ Myden Ahmed Shali, r/o Thenkasi, Thirunelveli District, Tamil Nadu in connection with Ramalingam murder case

ஏற்கெனவே கைது செய்யப் பட்ட 11 பேரிடமும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பில் நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதை அடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து 11 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதை அடுத்து, மேலும் பலர் இந்த விவகாரத்தில் சிக்குவர் என்றும், அவர்களும் விசாரிக்கப்படுவர் என்று கூறப் பட்டது. இந்நிலையில், அவர்கள் அளித்த தகவல்களில் இருந்து சில வீடியோக்களும் சிக்கின.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலியை விசாரணைக்காக  கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப் பட்டதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அறிவித்தனர்.

tenkasi nia search2 - 2025இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து, தென்காசியில் உள்ள ஷாலியின்  வீட்டில் இன்று காலை உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனால் தென்காசியில் காலையில் பரபரப்பு நிலவியது.

nia annct - 2025


[su_posts template=”templates/teaser-loop.php” id=”88323, 82136, 79251, 81781, 84328″ posts_per_page=”5″ order=”desc”]


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories