கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அமைச்சர் சிவகுமாருக்கு அனுமதி மறுப்பு!

இந்தியா சற்றுமுன்

sivakumar goa - 2026

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மும்பையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை சந்திக்க அமைச்சர் சிவகுமாருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். முன்னதாக, தங்களுக்கு காங்கிரஸ் மற்றும் மஜத., கட்சியினரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு கோரி மும்பையில் தங்கி இருக்கும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மும்பையில் உலா தனியார் ஓட்டலில் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் – ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள்13 பேர் தங்கி உள்ளனர். காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. தலைவர்களால் அச்சுறுத்தல் உள்ளதால் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், தங்களைச் சந்திக்க வரும் காங்கிரஸ், மஜத., கட்சியினர் எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க, அமைச்சர் சிவகுமாருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.