ஆட்டிப்படைக்கும் ‘ஆறு’ படையப்பன்! பாஜக., முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
bjp seats - 2026

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ஆறு வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலில்,

கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை
ஆயிரம் விளக்கு – குஷ்பூ
தாராபுரம் – எல்.முருகன்
காரைக்குடி – எச்.ராஜா
நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி – ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் முதல் கட்டமாக 6 பேரின் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளது, பாஜக.,விலும் ஆறு என்ற எண் ஆட்டிப் படைக்கிறது என்றுதெரியவந்துள்ளது.

அதிமுக., தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 6பேரின் பெயர்களையே வெளியிட்டது. திமுக., கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலானவற்றுக்கு 6 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டன.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.