#மாஹாளயபக்ஷம் – அதாவது புரட்டாசி மாத்தில் வளர்பிறை முடிந்து தேய்பிறை ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் என மொத்தம் பதினைந்து நாட்கள் ஆகும்.
இதில் அமாவாசைக்கு முதல் நாளான பதினான்காவது நாள் மிகவும் முக்கியமான தினமாகும், இந்த நாளை ஸஸ்தரஹத மாஹளய தர்ப்பணம் என்றே முன்னோர்கள் அழைக்கின்றார்கள்.
இந்த நாளில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரழந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கப்படுவது அவர்களின் ஆன்மாவுக்கு மேலும் உயர்வை கொடுக்கும்.
அப்படி இன்று (05/0/2021) பதினான்கவது நாள், இந்த நாளில் விசுவ ஹிந்து பரிஷத் – தென்தமிழகம் சார்பாக திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபத்தில் வைத்து வி.ஹெச்.பி யின் மாநில அமைப்புச் செயலாளர் தலைமையில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு தேசத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கும், இசுலாமிய, கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு பலிதானிகள் ஆனவர்களுக்கும், அயோத்யாவில் பலிதானிகளான கரசேவகர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
ஹிந்து அனைவரையும் நம் சகோதரர்களாக கருத வேண்டும் எனும் விசுவ ஹிந்து பரிஷத் தின் கொள்கையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.
இதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், இஸ்லாமிய மதத்திலிருந்து ஹிந்துவாக தாய் மதம் திரும்ப வந்த ஒரு சகோதரியும் நம்முடன் கலந்து கொண்டு இந்த ஸஸ்ரகத தர்ப்பணத்தை அவரும் செய்தார் என்பது தான்!
தேசத்திற்காக வாழ்ந்து உயிர்நீத்த, பலிதானமாகிய அனைவரின் ஆன்மா சாந்தியடைய நாளை தர்ப்பணம் கொடுக்க இருக்கும் அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்!
- தகவல்: ஆறுமுகக்கனி