பிரெட் பூரி
தேவையானவை:
பிரெட் (சால்ட்) துண்டுகள் – 5,
மைதா அல்லது கோதுமை மாவு – ஒரு கப், ரவை – ஒரு டீஸ்பூன்,
தயிர் – 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் பிரெட் பொடி, மைதா அல்லது கோதுமை மாவு, ரவை, உப்பு, தயிர் சேர்த்து, பூரி மாவு போல பிசையவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வும்). மாவை சிறிய உருண்டை களாக்கி, பூரிகளாக திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.