பாலக் பனீர்
தேவையானவை:
பாலக்கீரை – ஒரு கட்டு,
தக்காளி – 2,
பனீர் துண்டுகள் – ஒரு கப்,
கடுகு – சிறிதளவு,
கரம் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரையை அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி… பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.
தக்காளியுடன் இஞ்சி – பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, அதனுடன் அரைத்த கீரை விழுது, பனீர் துண்டுகள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால்… பாலக் பனீர் தயார்!