vankodumai - 2026

இரவில் தனியாக சென்ற கணவனை இழந்த ஒரு பெண்ணை நான்கு பேர் கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

ஜார்க்கண்டின் டும்கா மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 17 வயதான பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் கழிப்பறை கிடையாது. அதனால் அந்த பெண் அந்த ஊரின் ஒதுக்கு புறமான ஆற்றங்கரையோரம் இயற்கை உபாதையை கழிக்க செல்வார்.

இதை அந்த பகுதியிலிருக்கும் சில இளைஞர்கள் நோட்டமிட்டுள்ளார்கள். அதன் படி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் அந்த பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது இரு இளைஞர்கள் அந்த பெண்ணை ஒரு பைக்கில் தூக்கி சென்றார்கள்.

அவரை ஷிகரிபரா மற்றும் கதிகுண்டின் எல்லையில் உள்ள ஒரு ஆற்றின் அருகே, அவர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலும் இரு இளைஞர்கள் சேர்ந்து அவரை வரிசையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அதன்பிறகு அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலியல் வழக்கை அந்த இளைஞர்கள் மீதுபதிவு செய்து அவர்களை தேடி வந்தார்கள்.

இப்போது ராஜு கெவத், சுனில் மற்றும் ரஞ்சித் கெவாட் என்ற மூன்று குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். நான்காவது குற்றவாளி சந்தீப் கெவத் தற்போது தலைமறைவாக உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending