அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

kulithalai hindumunnai - 2026

இந்து மதத்தைச் சேர்ந்த ஆலயங்களில் தெய்வங்களை தரிசிக்க சிறப்பு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில், கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தின் அருகே, காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் கோவில்களை கொள்ளைக் கூடாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கோவில் சிலைகள் திருடப் படுவதை கண்டித்தும், கோவில்களின் வருமானம் கோவிலுக்கே சொந்தம் என்றும், வேறு எதற்கும் கோவில்களின் வருமானத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

மேலும், கோயில்களில் சிறப்பு நுழைவு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், தமிழக அரசை ஆலயத்தை விட்டு வெளியேற வற்புறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டது.

இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

hindumunnaninellai - 2026
ஹிந்து முன்னணி சார்பில் நெல்லையில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.