பாமக.,வின் 31-ஆவது ஆண்டு; தைலாபுரத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கிய ராமதாஸ்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

ramadoss laddu - 2026

பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை, அக்கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், இணைப் பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, துணைப் பொதுச்செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் ந.ம. கருணாநிதி, மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் பெருமுக்கல் சம்பத், மாவட்டத் தலைவர் ரத்தினம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.