அடுத்த 3 நாட்கள்… மழை பின்னியெடுக்கப் போவுதாம்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

balachandran - 2026

அடுத்த 3 நாட்களுக்கு வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பின்னியெடுக்கப் போகிறதாம். இந்த 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதன் காரணத்தால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்.

காற்று மண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால், வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்ள உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 31 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.

தமிழகத்தில் இதே காலத்தில் 9 செ.மீ., வரை பெய்திருக்க வேண்டியது, 6 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.