கன்யாகுமரியில் கனமழை! திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை

kanyakumari 1 - 2026
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழைத் தொடங்கியதால் கேரளா மற்றும் அதனை ஒட்டிய தமிழகத்தில் மழை பெய்கிறது.

கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
rain 1 - 2026
சூறைக்காற்றால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தேரூர், சுசீந்திரம் மற்றும் கன்னியாகுமரியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமாரி கடலில் தாழ்வான நீர்மட்டம் காரணமாக கடலில் தாழ்வான நீர்மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரானால் காலை 10.30 முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.