
சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) பூமியின் சில அற்புதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளன.
புதிய இன்ஸ்டாகிராம் பதிவில் ஐஎஸ்எஸ் பூமியின் வண்ணங்களின் என நான்கு வெவ்வேறு புகைப்படங்களை பகிரப்பட்டுள்ளது. “நகர விளக்குகள் முதல் சுற்றுப்பாதை சூரிய உதயத்தின் சாயல்கள் வரை” என விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்துள்ளது.
விண்வெளி நிலையத்தில் இருந்து புதிய புகைப்படங்களின் தொகுப்பில் அற்புதமான காட்சிகளை பகிர்ந்துள்ளது.
முதல்படம் இரவில் இந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் மற்றும் ரியூனியன் தீவின் பிரகாசமான விளக்குகள் இருண்ட கடல் பகுதிகளோடு எல்லைகளை காண்பிக்கிறது.
இரண்டாவது புகைப்படம் குறித்து பார்க்கையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் டாஸ்மன் கடலில் சூரியனின் பளபளப்பு தன்மையை காட்டுகிறது.
மூன்றாவது புகைப்படம் குறித்து பார்க்கையில் இத்தாலியின் இரவு விளக்குகள் மற்றும் சுற்றுப்பாதையை குறிக்கும் அட்டகாச புகைப்படம், சூரிய உதயத்தின் வசீகரிக்கும் அதிசய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் பகிர்ந்த இந்த புகைப்படத்தை 7.6 மில்லியன் பயனர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் 257000-க்கும் மேற்பட்டோர் இந்த பதிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு பயனர் பகிர்ந்த கமெண்ட் குறித்து பார்க்கையில், இது போன்ற புகைப்படங்களை பகிர்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம். அன்றாட பணியில் இருந்து இதுபோன்ற புகைப்படங்கள் பார்ப்பது சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் விண்வெளி நிலையத்தின் மூலம் எடுக்கப்பட்டது. சந்திரன் எந்த நிலையில் இருந்தாலும் விண்வெளியில் அது அற்புதமான பார்வை என சர்வதேச விண்வெளி நிலையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியன் சுற்றுப்பாதையில் இருந்து சூப்பர் பிங்க் மூன் ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
விண்வெளி வீரர்கள் பகிர்ந்த சூப்பர் மூன் புகைப்படம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சந்திரன் எந்த விதத்தில் எந்த கட்டத்தில் இருந்தாலும் அது விண்வெளியில் இருந்து அற்புதமான பார்வையை வழங்குகிறது என்று ஐஎஸ்எஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தது.
பில்லியன் கணக்கில் சிறு கற்கள்
விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன.
நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டும் நாடு அதிகம். பூமியை சுற்றி வரும் “நேச்சுரல் சாட்டிலைட்” அதாவது இயற்கையாக உருவான செயற்கைகோள் என்று அழைக்கப்படும் சந்திர கிரகம் ஆனது, பூமிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விட முடியாது.
நிலவில் நகரும் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது நாசாவின் லூனார் ரிகான்ஸின்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) ஆகும். இது நிலவை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் நிலவின் சுற்றுப்பாதைக்குள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் என்பதும், இது நிலவின் மேற்பரப்பை மிகவும் விரிவாக ஆய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விண்வெளி ஆய்வு குறித்து பார்க்கையில், பிற நாடுகளைவிட சீனா தாமதமாகவே இந்த தளத்தில் அடியெடுத்து வைத்தது. இருப்பினும் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சி பிறநாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக இருக்கிறது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்தது. இந்த வரிசையில் மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்துள்ளது.
போட்டிப்போட்டு ஆராய்ச்சி
அமெரிக்காவிற்கு பிறகு நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடாக சீனா இருக்கிறது. நிலவில் நாட்டிய சீன கொடியின் படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.
நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர கோடிக்கணக்கில் சீனா முதலீடு செய்தது. ஒரு வார பயணத்துக்கு பிறகு விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து நிலவின் மூலக்கூறுகளை கண்டறியவும் நிலவை ஆராய்ச்சி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்., தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.