வெட்டு கிளிகளின் வரவு ! லாஸ் வேகாஸ் மக்கள் தொந்தரவு !

உலகம் பொது தகவல்கள்

lash vekal - 2026
பிரகாசமான விளக்குகளால் ஈர்க்கப்பட்ட  நகரத்தில் வெட்டுக்கிளிகளின் குழுக்கள் இறங்கியுள்ளன.

பருவநிலை மாற்றம் காரணமாக லாஸ் வேகாஸ் நகருக்கு கூட்டம், கூட்டமாக வெட்டுக் கிளிகள் வரத் தொடங்கியுள்ளன. வானிலை ஆய்வுக்கான ரேடார்களை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள வண்ண விளக்குகளை கூட்டமாக சூழ்ந்து கொண்டு வட்டமடிக்கும் வெட்டுக் கிளிகளால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வதும் சவாலாகி உள்ளது. இதற்கு முன் இதுபோல் வெட்டுக் கிளிகள் வந்ததில்லை என்று லாஸ் வேகாஸ் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களுக்கு லாஸ் வேகாஸை வெட்டுக் கிளிகள் சூழ்ந்திருக்கும் என்றும் அதன்பிறகு வடக்கு நோக்கி இடப்பெயர்ச்சி அடையும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பல வாரங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இதனிடையே வெட்டுக் கிளிகளைப் பிடித்து சமைத்து பீட்சாவின் மேல் பரப்பி அங்குள்ள உணவகங்கள் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.ராட்சத வெட்டுக்கிளிகள் லாஸ் வேகாஸில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இறங்கியுள்ளன, அவை திரளிலிருந்து விண்வெளியில் இருந்து காணப்படுகின்றன. விஞ்ஞானிகள் கூறுகையில், நூறாயிரக்கணக்கான எண்ணிக்கையிலான பூச்சிகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.