தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்

gold shop - 2026

உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 விலை உயர்வு. சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.27,064-க்கு விற்பனை.

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்தது!

சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.584 அதிகரித்து ரூ.27,064க்குக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் ஒன்றுக்கு ரூ.73 என்ற அளவில் உயர்ந்து, கிராம் ஒன்று ரூ.3,383 என விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 60 காசு அதிகரித்து 44 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.