நாளை கொங்கண சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் கோவை லைஃப் ஸ்டைல்

konganasiddhar - 2026

தமிழ்ச் சித்தர்கள் போற்றும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ஸ்ரீகொங்கணச் சித்தர் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதி, ஊதியூர் ஸ்ரீகொங்கண சித்தர் கோவிலில் வரும் ஆக.3ம் தேதி ஆடி-18 சனிக்கிழமை அன்று காலை முதல் சிறப்பு அபிசேக ஆராதனை நடைபெறுகிறது.

அபிஷேகத்தின் நிறைவில் அன்னதானமும் மூலிகை ரசமும் வழங்கப்படும் என்றும் அனைவரும் கலந்து கொண்டு கொங்கண சித்தரின் பரிபூரண அருளாசி பெற்றுச் செல்லலாம் என்று கோயில் பூஜாரி (9442874659) தெரிவித்தார். அபிஷேகத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி வர விருப்பமுள்ளவர்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், நெய், நல்லெண்ணெய் திருமஞ்சனபொடி, பூக்கள், மாலை, பழங்கள், எலுமிச்சை ஆகியவற்றை வாங்கி வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி:- கே.சி.கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.