அப்பாவி பாகிஸ்தானியர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாம்!: கொல்லப்பட்ட வீரர்கள் உடல்களை வாங்க மறுத்த இம்ரான்!

இந்தியா உலகம் சற்றுமுன்

imrankan - 2026

காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உட்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப் பட்டது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் கொத்துக்குண்டுகளை வீசி வருகிறது. இந்திய ராணுவத்தின் இது போன்ற செயல் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் கொண்டு வரப்பட்ட சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என்றார்.

இந்நிலையில், எல்லையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், எல்லையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச விதிகளை மீறி கொத்து குண்டுகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் அச்சுறுத்தலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஐ.நா., கவனத்தில் கொ்ள வேண்டும். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டால், மட்டுமே தெற்கு ஆசியாவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட தயாராக உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனை பயன்படுத்தி கொள்ள இதுவே சரியான நேரம்… என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.