கல்லூரி விடுதியின் சுற்று சுவர் அடித்து செல்லும் காட்சி ! கனமழை எதிரொலி !

கோவை சற்றுமுன் பொது தகவல்கள்

kovai - 2026கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.

மாதப்பட்டி பகுதியில் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பேரூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி (சேரன் கல்லூரி) விடுதியில் நீளமான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

சிங்காநல்லூரிலிருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியினர் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். இதேபோல், மாநகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.