December 7, 2025, 6:12 AM
24 C
Chennai

வழக்கம்போல்… எதிர்க்கட்சித் தலைவரின் ‘அரிய’ கடமையாற்றிய ஸ்டாலின்! திமுக., வெளிநடப்பு!

stalin out assembly2 - 2025
file picture

இன்று காலை தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளிலேயே முத்தாய்ப்பாக தனது வழக்கமான எதிர்க்கட்சித் தலைவரின் பணியைத் திறம்பட ஆற்றி வரலாற்றில் இடம் பிடித்த மு.க.ஸ்டாலின், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இதை அடுத்து திமுக.,வினர் அவையில் இருந்து வழக்கம் போல் வெளிநடப்பு செய்தனர்.

2020ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டத்தொடர், இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், ஆளுநர் உரையின் போது அவர் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுக.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

banwarilal purohit - 2025

தமிழில் வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமது உரையைத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதோ பேச முயன்றார். ஆனால் ஸ்டாலினின் அந்த அநாகரிகச் செயலுக்கும் மதிப்பளித்து பதில் அளித்த ஆளுநர் புரோஹித், பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க மட்டுமே சட்டசபையை பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறினார்.

இவ்வாறு கூறியதைத் தாங்கமாட்டாத சுயமரியாதை மிக்க திமுக.,வினர் தொடர்ந்து தாங்கள் முன்னமேயே திட்டமிட்டபடி, வழக்கம் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக.,வினர் அவையில் இருந்து வெளியேறிய பின்னர் தமது உரையைத் தொடர்ந்த ஆளுநர் புரோஹித், தமிழகம் அமைதியான மாநிலமாகத் திகழ முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்றும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அமைதியான முறையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்றும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்…

  • ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.7000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
  • ரூ.563.30 கோடி மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு அளித்துள்ளது
  • பரம்பிக்குளம் – ஆழியாறு பிரச்னையை தீர்க்க தமிழக-கேரள முதல்வர்கள் சந்தித்து பேசியது பாராட்டுக்குரியது.
  • தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாற்று படுகையில் கர்நாடகா அணை அமைக்க முடியாது.
  • கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
  • முதல்வரின் கோரிக்கையை ஏற்று சரியான நேரத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டதற்கு நன்றி.
  • இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெயலலிதாவிற்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிட பணிகள் விரைவில் முடிவடையும்.
  • சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் அரசின் நலத்திட்டப் பணிகளை மக்கள் எளிதில் பெற முடியும் …

என்று உரையாற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories