குஜராத் போலீஸ் கான்ஸ்டபிளின் தீரம்! தோளில் சிறுமிகள்.. வெள்ளத்தில் ஒன்றரை கி.மீ.,!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

gujaratpoliceman - 2026

அரபிக் கடல் ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தென் மேற்குப் பருவமழை காரணமாக, மும்பை, மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகள், கோவா, கர்நாடகம், கேரளம், குஜராத்தின் கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம், மீட்புக் குழுவினர்,  காவல்துறையினர், தன்னார்வத் தொண்டர்கள் என பல தரப்பினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் மழை வௌ்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை 1.5 கி.மீ துாரம் தனது தோள்களில் சுமந்து சென்ற காவல்துறை அதிகாரி பிருத்விராஜ் சிங் ஜடேஜா தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிட்டார். தன் தோள்களில் இரு சிறுமிகளைச் சுமந்து கொண்டு, வெள்ள நீரில் ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு அவர் நடந்து சென்ற வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.


A touching visuals of courage and dedication by #Gujarat Police Personnel ; #Morbi Police constable Pruthviraj Sinh Jadeja rescues two children by walking one and a half kilometers in flood water. #GujaratFloods


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.