December 8, 2025, 3:58 PM
28.2 C
Chennai

வெற்றி தரும் ஹோரை ரகசியம்!

astrology main - 2025

ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம்
பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்
ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஹோரையை சூரியனுக்கு அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல ஹோரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.

ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய் ஹோரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஹோரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஹோரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன.6 – 1- 8 – 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஹோரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

*சூரிய ஹோரை

சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஹோரை :

சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஹோரை :

கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஹோரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஹோரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஹோரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு ஹோரை :

எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஹோரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஹோரை :

செவ்வாய் ஹோரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும். தாமதித்தால் கிடைக்காது.

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஓரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஹோரை சுப ஹோரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஹோரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை…

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

தகவல்:  திருமலை

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories