September 28, 2021, 1:09 pm
More

  ARTICLE - SECTIONS

  சனி பெயர்ச்சி 2017 – பொது பலன்கள்!

  நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.

  நவக்கிரகங்களில் கர்ம கிரகம் – தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் – சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.

  சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார்.

  ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.

  சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.

  குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும் தடைகளை தெரிந்து கொள்ள இயலும். சனி எங்கு இருக்கிறாரோ அதற்குண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம் தடைகளை அகற்ற முடியும்.

  சனியின் பலம்:
  சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

  நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 – சாலிவாகன சகாப்தம் 1939 – பசலி 1427 – கொல்லம் 1193ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 19.12..2017 சுக்ல ப்ரதமையும் செவ்வாய்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு – காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

  தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி – 28.03.2020 – சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார்.

  தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் – ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் – பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

  பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
  நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – கடகம் – சிம்மம் – துலாம்

  நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கும்பம் – மீனம்

  பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் – மிதுனம் – கன்னி – விருச்சிகம் – தனுசு – மகரம்

  எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

  ராசி – சனியின் பெயர் – பலன்
  மேஷம் – பாக்கிய சனி – தந்தை, தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் – பணப் பிரச்சனை
  ரிஷபம் – அஷ்டம சனி – அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
  மிதுனம்-  கண்டக சனி-  வாகனங்களில் செல்லும் போது கவனம் – வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
  கடகம் – ரண ருண சனி – உடல்நலத்தில் கவனம் தேவை
  சிம்மம் – பஞ்சம சனி – குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
  கன்னி – அர்த்தாஷ்டம சனி – வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை
  துலாம் – தைரிய வீர்ய சனி – தைரிய அதிகரிக்கும் – மதியூகம் வெளிப்படும்
  விருச்சிகம்-  வாக்குச் சனி – வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
  தனுசு – ஜென்ம சனி – அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
  மகரம் விரைய சனி வீண் விரையம் ஏற்படுதல்
  கும்பம் – லாப சனி – அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
  மீனம் – தொழில் சனி – தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்

  சனி பகவானின் நக்ஷத்ர சஞ்சாரம்:

  நக்ஷத்ரம் சாரம் ஆங்கிலம் ராசி நிலை
  மூலம் 1ம் பாதம் கேது 19.12.2017 தனுசு நேர்
  மூலம் 2ம் பாதம் கேது 07.01.2018 தனுசு நேர்
  மூலம் 3ம் பாதம் கேது 11.02.2018 தனுசு நேர்
  மூலம் 3ம் பாதம் கேது 25.04.2018 தனுசு வக்ரம் ஆரம்பம்
  மூலம் 2ம் பாதம் கேது 15.06.2018 தனுசு எதிர்
  மூலம் 1ம் பாதம் கேது 07.08.2018 தனுசு எதிர்
  மூலம் 1ம் பாதம் கேது 21.08.2018 தனுசு வக்ர நிவர்த்தி
  மூலம் 2ம் பாதம் கேது 11.09.2018 தனுசு நேர்
  மூலம் 3ம் பாதம் கேது 08.11.2018 தனுசு நேர்
  மூலம் 4ம் பாதம் கேது 11.12.2018 தனுசு நேர்
  மூலம் 4ம் பாதம் கேது 13.12.2018 தனுசு மேற்கே அஸ்தமனம்
  பூராடம் 1ம் பாதம் சுக்கிரன் 09.01.2019 தனுசு நேர்
  பூராடம் 1ம் பாதம் சுக்கிரன் 12.01.2019 தனுசு கிழக்கே உதயம்
  பூராடம் 2ம் பாதம் சுக்கிரன் 11.02.2019 தனுசு நேர்
  பூராடம் 3ம் பாதம் சுக்கிரன் 10.04.2019 தனுசு நேர்
  பூராடம் 3ம் பாதம் சுக்கிரன் 08.05.2019 தனுசு வக்ரம் ஆரம்பம்
  பூராடம் 2ம் பாதம் சுக்கிரன் 11.05.2019 தனுசு எதிர்
  பூராடம் 1ம் பாதம் சுக்கிரன் 08.07.2019 தனுசு எதிர்
  பூராடம் 1ம் பாதம் சுக்கிரன் 03.08.2019 தனுசு வக்ர நிவர்த்தி
  பூராடம் 2ம் பாதம் சுக்கிரன் 08.11.2019 தனுசு நேர்
  பூராடம் 3ம் பாதம் சுக்கிரன் 14.12.2019 தனுசு நேர்
  பூராடம் 3ம் பாதம் சுக்கிரன் 26.12.2019 தனுசு மேற்கே அஸ்தமனம்
  பூராடம் 4ம் பாதம் சுக்கிரன் 12.01.2020 தனுசு நேர்
  பூராடம் 4ம் பாதம் சுக்கிரன் 25.01.2020 தனுசு கிழக்கே உதயம்
  உத்திராடம் 1ம் பாதம் சூரியன் 12.02.2020 தனுசு நேர்
  உத்திராடம் 2ம் பாதம் சூரியன் 28.03.2020 மகரம் நேர்

  சனி பயோடேட்டா:

  சொந்த வீடு – மகரம், கும்பம்
  உச்சராசி – துலாம்
  நீச்சராசி – மேஷம்
  குணம் – குரூரம்
  மலர் – கருங்குவளை
  ரத்தினம் – நீலம்
  கிரக லிங்கம் – அலி
  வடிவம் – நெடியர்
  பாஷை – அன்னிய பாஷை
  ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – 2 1/2 வருஷம்
  வஸ்திரம் – கருப்பு பட்டு
  க்ஷேத்திரம் – திருநள்ளாறு, திருக்குளந்தை(பெருங்குளம்), சனிசிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்
  ஆசனம் – வில் அம்பு
  ஸமித்து (ஹோமக் குச்சி) – வன்னி
  நைவேத்தியம் – எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
  தேவதை – ம்ருத்யு, சிலர் எமன் என்பர்
  ப்ரத்யதி தேவதை – திருமுக்தி, பிரஜாபதி
  திசை – மேற்கு
  வாகனம் – காக்கை சிலர் கழுகையும் சொல்கின்றனர்.
  தானியம் – எள்
  வஸ்து – எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்
  உலோகம் – இரும்பு
  கிழமை – சனிக்கிழமை
  பிணி – வாதம்
  சுவை – கைப்பு
  நட்பு கிரகங்கள் – புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்
  பகை கிரகங்கள் – சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
  சம கிரகங்கள் – குரு (வியாழன்)
  காரகம் – ஆயுள்
  தேக உறுப்பு – தொடையிலிருந்து கால்கள் வரை
  நக்ஷத்திரங்கள் – பூசம், அனுஷம், உத்திரட்டாதி
  திசை வருடம் – 19 ஆண்டுகள்
  மனைவி – நீளாதேவி
  உபகிரகம் – மாந்தி

  சனி காயத்ரீ மந்திரம்

  ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!
  ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
  ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!
  ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
  ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

  சனி ஸ்லோகம்

  நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
  சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!
  அர்த்தம்:
  கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

  பொதுவான பரிகாரங்கள்:
  தினமும் வினாயகர் – ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
  தினமும் வினாயகர் அகவல் – ஹனுமான சாலீசா – சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.
  அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.
  தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது – குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.
  தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.sa

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-