கிழமைகள் – 7 ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும். சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது. ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது ஞாயிறு – பானு வாஸரம் திங்கள் – இந்து வாஸரம் செவ்வாய் – பௌம வாஸரம் புதன் – ஸௌம்ய வாஸரம் வியாழன் – குரு வாஸரம் வெள்ளி – ப்ருகு வாஸரம் சனி – ஸ்திர வாஸரம்
Popular Categories



