
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
சிம்மம்
இதுவரை உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு 11-05-2025 முதல் லாபஸ்தானமாகிய மிதுனத்தில் அமர்கிறார். குரு பார்க்குமிடம் சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு விலகி, மனத்தில் புது தெம்பு பிறக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். முடிந்தவரை சேமிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்
குரு மூன்றாமிடமான முயற்சி, கீர்த்தி ஸ்தானத்தை பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் சகல முயற்சிகளுக்கு நற்பலன்களை பெற்று தரும். உறுதுணையாக செயல்பட உங்களுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும். எந்த செயலுக்கு ஊக்கம் கிடைக்கும் போது அது மேலும் பல வழிகளில் வெற்றியை பெற்று தரும். நீங்கள் தொழிலில் பல இடையூறுகளை சந்தித்து வந்தீர்கள். இனி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பஞ்சமஸ்தானத்தை குரு பார்ப்பதால் குரு அருளால் உங்களின் பூர்வீக சொத்து சம்மந்தமான சில விவகாரங்கள் தீரும். குல தெய்வ வழிபாடு மூலம் உங்கள் இலக்கு விரைவில் நிறைவேறும் பாதியில் நின்ற காரியங்கள் இனி செயல்படதுவங்கும். நினைத்த காரியம் கைகூடும்.
களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடக்காதவருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவருக்கு கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய திட்டங்களுக்கு நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த சில விடயம் விரைவில் நடக்கும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற நல்ல வழி கிடைத்து அதற்கு உண்டான பணிகள் நடக்கும்.
உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துகளைக் கேட்டு வாங்குவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை நினைத்து காரியத்தை துவங்குவது இன்னும் சிறப்பான பலனை பெற்று தரும்.




