
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
கன்னி
இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் உங்களின் தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சத்ருஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்வில் பொன்னான நாளில் அமையும்.
உங்களின் தொழில்ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பொதுவாக குரு பத்தில் அமர்ந்தால் பதவி பறிபோகும், தொழில் கெடும் என்று சொல்வார்கள். உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும், ராசிநாதனும் ஒருவரே என்பதால் குரு பாதி பலன்களை குறைத்து கொள்வார் தொழிலில் லாபமும் நஷ்டமும் கலந்தே உண்டாகும். எளிமையான வாழ்க்கையை விரும்பும் உங்களுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் இருந்து மீள்வீர்கள். உடல்நலனில் இருந்த குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் காரியத்தில் இறங்கி வேலை பார்ப்பீர்கள். தேவைகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி நல்ல பலன்களை பெறுவீர்கள். 08.06.2025 முதல் 08-07-2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது.
உங்களின் சத்ரு ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை இருவருக்கும் அமைவதால் குரு பார்வையால் மறைமுகமான சில எதிரிகள் உங்களின் செயல்களை தகுந்த வந்த நிலை மாறி உங்களுக்கு சாதகமாக செயல்பாடுகள் அமையும். சிலருக்கு வாங்கிய கடன் தீரும். வரவேண்டிய இடத்தில் பணம் வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.
08-10-2025 முதல் குரு கடகத்தில் அதிசாரமாக அமர்வது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வழி கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வெளிநாடு வேலை தொடர்புகள் உண்டாகும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தை தவிர்த்து விடுங்கள். குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் இருப்பின், அவை உங்களுக்கு சாதகமாகும். பழைய ஆவணங் களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை இட்டு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்




