
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
கடகம்
இதுவரை உங்களின் லாபஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி விரைய குருவாக வரும் 11-05-2025 முதல் அமர்வதும் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், அட்டம ஸ்தானத்தையும் பார்வை இடுவதால் உங்களுக்கு நன்மையும் தீமையும் வெற்றியை தரும்.
சுகஸ்தானமான நான்காமிடத்தை குருவால் பார்க்கபடுவதால் வீடு கட்டுதல், வீடு பாராமரிப்பு பார்த்தல், வாகன வசதிகளை பெருக்கி கொள்தல் போன்ற வழிகளில் நன்மையை அடைவீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும் ஏற்கனவே உடல் நலமின்றி இருப்பவர்களுக்க உடல்நல மேன்மை பெறுவீர்கள். தாயார் உடல் நலனின் கவனம் செலுத்துவீர்கள். பொது நலன் கருதி நீங்கள் செயல்படுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும்.
சத்ரு, ரண, ருண ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற பொருளாதார பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்று நலம் பெறுவீர்கள். கடன் தீர்த்து வைத்தல், மூலம் பல நாள் கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளால் பட்ட துன்பம் விடுபடும். வங்கி மூலம் கடன் பெற்று செய்தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். அட்டம சனியுடன் ராகு இணைந்து இருப்பதால் எந்த காரியமாக இருந்தாலும் அதில் சிலரின் வில்லங்கம், விவகாரம் வந்து தொல்லை கொடுத்து வந்த நிலை மாறி நன்மை பெறுவீர்கள்.
வரும் 08-10-2025 முதல் குரு அதிசாரமாக அமர்வது உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து எடுத்த காரியத்தில் நினைத்தபடி செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து மேன்மை அடைவீர்கள். எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி சரியாக செயல்பட்டு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்று சேமிப்புகளை ஊக்கபடுத்துவீர்கள்.
குருபகவான் பார்வை பலன்கள்:
குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கூடா பழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள். குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வழக்குகள் இழுபறியாகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நோன்பிருந்து நவகிரக குருவுக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் இட்டு மஞ்சள் நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வர நினைத்த காரியம் தடையின்றி சுபிட்சமாக அமையும்.




