December 5, 2025, 1:20 PM
26.9 C
Chennai

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): மிதுனம்

gurupeyarchi image common - 2025

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது

குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

மிதுனம்  

இதுவரையிலும் விரைய குருவாக இருந்த குரு பகவான் இனி வரும் 11-05-2025 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்கிறார். கடந்த காலத்தில் தேவையற்ற பல செலவுகள் வந்து சிரமத்தில் இருந்தீர்கள் இனி ஜென்ம குரு இருக்குமிடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் சிறப்பாக அமையும்.

ஜென்ம குருவாக வந்து உங்களின் அனைத்து செயல்பாடுகளிலும் துரிதமாக செயல்படும் விதம் புதிய விடயங்களை பற்றி தெரிந்து கொள்தல் எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு குறிப்பெடுத்துக்கொண்டு செயல்படுதல் நல்லது. ஞாபக மறதிகள் வரும் என்பதால் நினைவுபடுத்தி கொள்வது நல்லது.

உங்களின் களத்திரஸ்தானத்தை பார்வை இடுவது திருமண காரியங்கள் பேசுதல், திருமணம் நடத்தல் வேறு சுபகாரியங்கள் வீட்டில் நடத்துதல் போன்ற காரியம் நடக்கும். மன அழுத்தம் அதிகமாக வரும் போது சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 08-06-2025 முதல் 08-07-2025 வரை குரு அஸ்தமானமாகும். காலம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.

உங்களின் பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது புனித யாத்திரை சென்றுவருதல். கோவில் காரியங்களில் முன்னின்று நடத்துதல். நற்காரியங்களும் உதவிகள் செய்தல் போன்ற செயல் நன்றாக நடக்கும். குரு பார்க்கும் இடம் சிறப்பாக இருக்கும். என்பதால் உங்களின் அனைத்து காரியங்களும் வளம் பெறும். குடும்ப சூழ்நிலைகளை மறந்து ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்து கொண்டு அதற்கு நேரம் ஒதுக்கி செயல்படுவீர்கள். புதிதாக ஆன்மீக குருமார்களின் சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது கடன் பிரச்சனை நீண்டகால தீராத விடயங்கள் அனைத்து தீர்ந்து சுபிட்சம் பெறுவீர்கள். பணபுழக்கம் தாராளமாக இருக்கும்.

குரு பகவான் பார்வை பலன்கள்: 

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப்பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு கல்யாணம் கூடிவரும். குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் பணம் ஓரளவு வரும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் கொண்டை கடலையில் மாலை கட்டி போட்டு வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories