
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
விருச்சிகம்
உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தையும், முயற்சி ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அட்டம குருவாக இருப்பது சில நேரம் பணதட்டுப்பாடுகளை தருவதும் ஆவணங்கள் மூலம் சிக்கலும் வரலாம் என்பதால் அடுத்தவருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது.
தனஸ்தானத்தை குரு பார்ப்பது தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டிவரும். அடுத்தவரை நம்பி செயல்படும் எந்த காரியமும் சிறப்பாகவோ, நல்லதாகவோ அமையாது என்பதால் அடிக்கடி அதில் கவனம் செலுத்துவது நல்லது. வரக்கூடிய வருமான வாய்ப்புகளை சேமிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். ஏதாவது செலவீனம் வந்து மறையும். புதிய தொழில் வாய்ப்புகள் வந்தாலும் அதனை தவிர்த்து நல்ல முயற்சிகளை ஊக்கபடுத்தி செயல்படுவதன் மூலம் தன்மை பெறுவீர்கள்.
உங்களின் அர்த்தாஸ்டம சனியுடன் ராகு இணைவதால் பல உடல்நல குறைபாடுகளும் தூக்கமின்மை, பல எண்ண அலைகளால் வரும் துன்பங்களுக்கு குரு பார்வையால் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பெறும் கஷ்டத்தை அனுபவித்து தீர்த்து விடுவீர்கள். தொழிலாளர்களின் கஷ்டங்களை தன் கஷ்டம் போல் நினைத்து அவர்களுக்கு உங்களால் உண்டான உதவிகளை செய்வீர்கள்.
விரையஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஒரு புறம் செலவுகள் வந்தாலும் அதனை சரி செய்ய ஏதாவது வழியில் பண புழக்கம் வந்து உங்களுக்கு எதிலும் சிரமமின்றி உறுதுணை கிடைக்க பெறுவீர்கள். கடனாக இருந்தாலும் கடமையாக இருந்தாலும்.
அதை சமாளிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் உடனே செய்துவிட வேண்டுமென்று செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதே அளவு விமர்சனங்களும் வரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். தாய் வழிச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு, திடீர்ப் பயணங்கள் கூடி வரும். அதன்மூலம் ஆதாயமும் உண்டு. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது |
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண பட்டு வஸ்திரத்தை பைரவருக்கு கொடுத்து உளுந்து வடை மாலை போட்டு தேங்காய் முடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நற்பலன் தரும்.




