
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
தனுசு
இதுவரை ராசிநாதனாகிய குரு ஆறாமிடத்தில் இருந்து வரும் 11-05-2025 முதல் ராசியை பார்ப்பதும் ஏழாமிடத்தில் அமர்வதும் லாபஸ்தானத்தையும், முயற்சிஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசகாரர்களுக்கு நல்ல காலமாகவே அமையும். எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.
ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் மனசஞ்சலங்கள் நீங்கி பல நாட்கள் மன வருத்தம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி படிபடியாக இயல்பு நிலைக்கு வருவீர்கள். எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். முக்கிய விஜயங்களில் தனி திறமை கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
உங்களின் முயற்சிகள் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையும். செய்யும் தொழிலிலும் இனி உங்களின் ஈடுபாடும் தொடர் முயற்சியும் உங்களை மேலும் வெற்றி பெற செய்யும் சனி / ராகு மூன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல சூழ்நிலை என்றாலும் அவர்களுக்கு குருவின் பார்பையும் பெறுவது மிக சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.
லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவது எதிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து லாபகரமான வளர்ச்சியை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையை பெறுவீர்கள். பல சோதனைகளை கடந்து மேன்மையை அடைவீர்கள். எதிர்கால வளங்களை உறுதி செய்து வெற்றியை காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் அன்பை பெறுவார்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
ராசியை குருபகவான் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கவுரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக குளம் வெட்டுவது, கிணறு அமைப்பது என்று பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் குடமுழுக்கு, ஊர் திருவிழா என்று உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.உங்களால் பயன் அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வீண் பழிகள் விலகும். உங்கள் ராசிக்கு 11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வையைப் பெறுவதால் விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு உண்டாகும்
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குரு வழிபாடு செய்து தீபமேற்றி வேண்டு கொள்வதும் ஜீவசமாதிகளில் சென்று சிறிது நேரம் தியானம் செய்து வருவதும் சிறப்பான பலனை பெற்று தரும்.




