
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
மகரம்
இதுவரை உங்களின் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் தடைபட்ட பல காரியங்கள் சிறப்பாக இயங்க கூடிய சூழ்நிலை அமையும்.
முக்கிய காரியங்களில் கவனம் செலுத்தி உங்களில் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்து வருவீர்கள். ஏற்கனவே ராசிநாதன் ராகுவுடன் தனஸ்தானத்தில் இருப்பதும் குருவின் பார்வை இருவருக்கும் பெறுவது உங்களின் தொழிலில் சிறந்து விளங்குவதுடன் செய்யும் உத்தியோகத்தில் உயர்பதவி பெறுவதும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். பண தட்டுபாடு நீங்கி பணபுழக்கம் அதிகரிக்கும் எதிர்பாராத தனவரவு உங்களை மகிழ செய்யும்.
தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் இதுவரை நிரந்தர தொழிலின்றி இருந்தவர்களுக்கு விரைவில் தொழில் வளர்ச்சியும் நல்ல தொழிலும் அமையும். ஆடம்பர பொருட்கள் விற்பனையானர்கள் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர்நிலையை அடையும் வாய்ப்பு அமையும்.
விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செலவுகள் குறைத்து வளம் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் இனி வெற்றி பாதையில் சிறக்கும் வழிகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.
உறவுகளால் மதிக்காமல் இருந்த நிலை இனி மாறி நல்ல உறவுகளை புதுப்பித்து கொண்டு வளம் பெறுவீர்கள். எடுத்த காரியம் இனி ஜெயமாகும். பொருளாதார நிலை மேம்படும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பல வகையிலும் பணவரவு உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டு. பேச்சில் நிதானம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும். தாம்பத்தியம் இனிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை உண்டு என்றாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளுக்குத் தெரியாமல், அலுவலகத்தில் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறும் எண்ணத்தை கைவிடவும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும்
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு கடலை மிட்டாய் வைத்து நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.




