December 5, 2025, 2:01 PM
26.9 C
Chennai

தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: கடகம்

new year palangal 2021 - 2025

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs - 2025

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com


4 katakam
4 katakam

கடகம் : (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  வருட ஆரம்பம் 10ல் சூரியன், சுக்ரனுடன் ராசி நாதன். தொழில், உத்தியோகம் நல்ல நிலையில் இருக்கும். பணவரவு தாராளம். புதிய வீடு வாகனம் நிலம் வாங்க இந்த காலம் ஏற்றது.

அதேநேரம் குரு பகவான் 8ல் 13.06.21 வரை அப்பொழுது பொருளாதார கஷ்டம், பண விரயம், எதையும் செய்யமுடியாமல் தடை உண்டாகுதல், பயம், அச்சம், வழக்குகளில் சிக்குதல் அதனால் பண விரயம் இப்படி பல இருந்தும் அதிக நன்மை உண்டாவது ராகு சஞ்சாரம் மன தைரியத்தையும் துணிச்சலையும் கொடுக்கும்.

இருந்தாலும் கவனம் இன்மை அல்லது பொறுமை இன்மை இவற்றால் வழக்குகள் அதனால் செலவுகள் குடும்ப தேவைகள் நிறைவேறாமல் போகுதல் என்றும் இருக்கும்.நல்லவர்கள் பெரியோர்களின் ஆலோசனை படி நடப்பது கஷ்டத்தை குறைக்கும். முதல் 4மாதங்கள் பெரிய நன்மைகள் இருக்காது. பரவாயில்லை என்ற அளவில் இருக்கும் புதிய முயற்சிகளை அடுத்த நாலுமாதங்களில் செய்வது நன்மை தரும். சேமிப்பும் வளம் தரும். தனது மற்றும் குடும்ப அங்கத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது மருத்துவ செலவுகளை குறைக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: 7ல் குரு 14.11.21 வரை , சூரியனும் பலமுடன் சஞ்சாரம், செவ்வாய் ராகு, புதன் இவை அளப்பறிய நன்மை தரும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். தேவைகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் தாராளம், பிரிந்த உறவுகள் ஒன்று சேருவர், உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழில் வளர்ச்சியடையும் அரசு உதவிகள் கிடைக்கும். தொழில் விஸ்தரிப்பும் நல்ல பலனை தரும். தாமதமான திருமணம், குழந்தை பாக்கியம், புதுவீடு குடிபோகுதல் நிறைவேறும், முந்தய வழக்குகள், கடன்கள் தீர ஆரம்பிக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். அனைத்து பிரிவினருக்கும் முன்னேற்றம் நன்றாக இருக்கும். நினைத்தவை நிறைவேறும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.

மார்கழிமுதல் பங்குனி வரையில்: பொதுவாக கிரஹ நிலைகள் சாதகம் இல்லை என்றாலும் பங்குனியில் குரு,ராகு-கேது பெயர்ச்சிகள் 2மாதம் முன்பே பலன் தருவதால் ஓரளவு நன்மை இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு இருக்கும். இடமாற்றம் நிச்சயம் உண்டு. குடும்பத்தில் சிறு சிறு பணப்பிரச்சனைகள் உறவுகளால் தொல்லை என்று இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். பெரியோர்கள் ஆலோசனை படி நடப்பதும். நிதானம் அமைதி இருந்தால் பெரிய கஷ்டங்கள் வராது. பணம் கொடுக்கல்வாங்கல், அடுத்தவருக்கு உத்திரவாதம் தருவது, உணர்ச்சிவசப்படுதல், இவை தேவையில்லாத வழக்கு, மன உளைச்சலை தரும். பொதுவில் நடு நாலு மாதம் சேமிப்பை அதிகப்படுத்தி இருந்தால் இந்த நாலுமாதங்களை எளிதில் கடந்துவிடலாம். திருமணம், புனித யாத்திரை, வீட்டை சரிசெய்வது, மராமத்து வேலை, போன்ற சிலவிஷயங்கள் கைகூடும். சிலருக்கு புத்திரபாக்கியம், பதவி உயர்வு, தொழிலில் லாபம் என்று இருக்கும். மொத்தத்தில் கலந்து கட்டி இருப்பதால் சேமிக்கும் வழக்கத்தை கொண்டால் பண ரீதியான பிரச்சனைகள் குறையும். உணர்ச்சிவசப்படாமல், வீன் வாக்குவாதம் செய்யாமல் இருந்தால் மன ரீதியான உடல் ரீதியான பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.

ப்ரார்த்தனைகள் : அம்மன் லக்ஷ்மி போன்ற பெண் தெய்வ வழிபாடு நலம் தரும். நெய் விளக்கேற்றுதல் அம்மன் ஸ்லோகங்களை மாலை வேளையில் சொல்லுதல் பலன் தரும். வயோதிகர்கள், மாற்றுதிறனாளிகள் இவர்களுக்கு சரீரத்தால் உதவிகளை செய்வது, அன்னதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுதல், கோயில் உழவாரப்பணி இவை நன்மை தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories