தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: சிம்மம்

new year palangal 2021 - 2026

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs - 2026

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 30 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

5 simmam
5 simmam

சிம்மம் : (மகம் 4 பாதங்கள், பூரம் 4பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  ராசிநாதன் ஏப்ரல் 13ம் தேதி உச்சராசியில் சஞ்சரிப்பது மேலும் புதன், சனி,சுக்ரன், செவ்வாய் இவையும் இந்த வருடம் முழுவதும் நன்மை தருகிறது.

குரு 7ல் சஞ்சரிப்பதும் பின் 6ல் வக்ரியாக இருப்பதும் நன்மை தரும். பொருளாதார ஏற்றம் நிச்சயம் உண்டு. பெண்கள் மூலம் அதிக நன்மை கிடைக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மனதில் உற்சாகத்தை தரும், ஏற்கனவே போட்டுவைத்த திட்டங்கள் நிறைவேறும் காலம், தெளிவான சிந்தனை இருக்கும், எதிரிகள் தொல்லை குறையும் கடன் சுமைகள் தீரும்.

இல்லத்தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாரா இனங்களில் வருவாய் வந்து மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வழியில் திருமணம் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். நீண்ட நாளாக தடை பட்டு வந்த திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும் வாழ்க்கை துணைவர் வகையில் வருமான உயர்வு ஏற்படலாம். இட மாற்றம் உண்டாகும். பொதுவில் பண புழக்கம் அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது திருப்தி அதிகம் இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் இந்த நாலுமாதங்கள் சேமிப்பை அதிகப்படுத்துங்கள். பெரிய கஷ்டங்கள் ஏதும் இருக்காது உழைப்பில் உற்சாகம் இருக்கும். தொழிலில் லாபம் வரும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 31 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: 6ல் குரு வக்ரியாகவும் பின் நீசமாகவும் இருப்பது, ராசிநாதன் ஜென்மத்தில் இருக்கும் போதும், பின் துலாத்தில் நீசம் பெறும் போதும் முடிவிலும் நன்மை தருவதாலும், நோய்கள் அகன்று, கடன் எதிரி தொல்லை நீங்கி உற்சாகம் பெருகும். ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் நல்ல நிலை பதவி உயர்வு எதிர்பார்பது கிடைக்கும். சொந்த தொழிலில் முடங்கி இருந்தது இனி லாபத்தை நோக்கி பயணிக்கும். அனைத்து பிரிவினருக்கும். பணப்புழக்கம் தாராளம். விரும்பிய இடமாற்றம், புதுவீடு குடிபோகுதல் திருமணம், புத்திரபாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, இல்லத்தில் குதூகலம், கேளிக்கை விருந்து, உல்லாச பயணம் இவை எல்லாம் இருந்து மனதில் சந்தோஷத்தை தரும். பொதுவில் இந்த மாதங்களில் பெரிய துன்பம் ஏதுமில்லை. தனிப்பட்ட ஜாதகங்களில் கிரஹவலிமை குறைவாக இருந்தால் மட்டும் கொஞ்சம் எதிர்மறை பலன்கள் இருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: பங்குனியில் பெயர்ச்சியாகும் குரு, ராகு-கேது சஞ்சாரம் 4மாதம் முன்பே பலனை தந்துவிடுவதால் இந்த நான்கு மாதங்களும் கூட அதிக நன்மையே இருக்கும். முயற்சிகளில் அதிக வெற்றி, உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, புது வேலை தேடுவோருக்கு வெற்றிகிட்டும். புதிய தொழில் தொடங்க முயல்வோர், ஏற்கனவே தொழில் செய்வோர் தொழில் விஸ்தரிப்பு, கடனுதவி, அரசு ஆதரவு என நன்றாகவே இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி கூடும். புதுவீடு, வாகனம், விவசாயத்தில் நல்ல லாபம், குழந்தைகளால் மகிழ்ச்சி வீட்டு தேவைகள் பூர்த்தியாகுதல், உறவுகளால் மகிழ்ச்சி, சேமிப்பு அதிகரித்தல், பணப்புழக்கம் தாராளம் எதிரிகள் மறைதல் ஆரோக்கியம் மேம்படுதல், கடன் நீங்குதல் என அனைத்தும் நன்றாக இருக்கும். ஜீவன வகையில் பிரச்சனை வராது. வருடம் முழுவதும் நல்ல பலன்கள் இருக்கும் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் அடுத்த வருடமும் நன்மை தொடரும் சிரமங்கள் குறையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் - ஜூலை 29 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

ப்ரார்த்தனைகள் : உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வ வழிபாடு, கோயில்களில் உழவாரப்பணி செய்வது, கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது என்பதும் முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்வது போன்றவை பெரிய நன்மைகளை தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories