தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: தனுசு

new year palangal 2021 - 2026

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs - 2026

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 28 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

9 dhanusu
9 dhanusu

தனூர் : (மூலம் 4பாதங்கள், பூராடம் 4பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  சூரியன் 5ல் உச்சம் சந்திரன் சுக்ரனுடன் 5ம் இடம் என்பது புத்திரம், புகழ், கல்வி அந்தஸ்து அதிகாரம் உங்கள் செல்வாக்கு உயரும் நேரம் ஆரம்பம். மற்ற கிரஹங்களில் 2ல் இருக்கும் சனி பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார்.

6ல் இருக்கும் ராகு நோய், கடன், எதிரிகளை கட்டுப்படுத்தி எதிர்பாராத வெற்றி, பணவரவு போன்றவற்றை தருகிறார். இவர்கள் வருடம் முழுவதும் அங்கு இருப்பவர்கள், செவ்வாய்,புதன் அவ்வப்போது நன்மையும், சுக்ரன் பெரும்பாலும் நன்மையும் தருவதால் பொருளாதாரம் நல்ல நிலையில் வருடம் முழுவதும் இருக்கும்.

சனி கேதுவால் சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரிப்பதால் சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.

கணவன் மனைவி அந்யோந்யம் ஏற்படும். 7ல் செவ்வாய் திருமணம் போன்ற தடைகளை செய்யும். ஆனாலும் தனிப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் திருமணம் கைகூடும். 12ல் கேது+2ல் சனி குடும்பத்தில் சங்கடங்களையும் சச்சரவுகளையும் தரும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவு தரும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 26 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

உத்தியோகத்தில் நல்ல நிலை பதவி உயர்வு இருக்கும். சொந்த தொழில் நல்ல லாபம் உண்டாகும். தொழிலாளர்கள் வகையில் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். பெரும்பாலும் இந்த நாலு மாதங்கள் நன்மையே

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: தடைபட்டுவந்த திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூமி, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், கடந்தகாலத்தில் ஏற்பட்ட வழக்குகள் யாவும் சாதக நிலைக்கு திரும்பும். அவப்பெயர்களும் மாறும். மனதில் உற்சாகம் ஏற்பட்டு எல்லோருடனும் அனுசரித்து போவீர்கள். அதேபோல தெய்வ வழிபாடு, விருந்து கேளிக்கைகள் இல்லத்தில் வரும் புதிய உறவுகளால் நன்மை என்று நன்றாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உடல் ஆரோக்கியத்தில் செலவு ஏற்படலாம், அதே போல குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலமும் புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலமும் முயற்சிகளில் தடை தாமதம், மன உளைச்சல் ஏற்படும். பெரும்பாலும் நன்மை என்பதால் இவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகம் தொழில் இவற்றில் முன்னேற்றம் இருக்கும். பொதுவில் நன்மை அதிகம்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: பங்குனியில் மாறும் குரு, ராகு-கேது பெயர்சிகள் முன்கூட்டியே நல்லபலன்களை தருவதால் செவ்வாய், சனி போன்ற கிரஹங்களால் ஏற்படும் தொல்லைகள் குறையும். நினைத்ததை சாதித்து கொள்ளலாம். பணப்புழக்கம் மிக தாராளம். வீடு வாகன வகையில் சுப செலவுகள் இருக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு மட்டுமல்லாது வெளிநாடு வேறு உத்தியோகம் போன்ற முயற்சிகள் வெற்றிதரும். அலுவலகத்தில் வைத்திருந்த நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். சொந்த தொழில் செய்யும் அனைவரும் லாபம் பார்ப்பார்கள், புதிய தொழில் தொடங்கும் திட்டம் செயலுக்கு வரும். பண உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். தொழில் விஸ்தரிப்பு எளிதாகும் பெயர் புகழ் பரவும். பொதுவில் இந்த வருடம் முழுவதும் நன்மை அதிகம். குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்வீர்கள், தெய்வ அனுகூலம் இருக்கு. அதனால் வழக்குகளில் சாதக தீர்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் மூலம் அதிக மகிழ்ச்சி கிடைக்கும். பெற்றோர்கள் சகோதர வகையிலும் ஆதாயம் உண்டு. சேமிப்பு நல்ல நிலையை உண்டாகும். துன்பங்கள் குறைவு. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 31 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

ப்ரார்த்தனைகள் : தக்ஷிணாமூர்த்தி, விக்னவிநாயகர், யோஹ ஹயக்ரீவரை வழிபடுவது கோயிலில் விளக்கேற்றுவது, நாம ஜெபம் செய்வது நன்மை தரும். அதிக நன்மை இருப்பதால், தான தர்மங்கள், அன்னதானம், வஸ்திரதானம் இவற்றை அதிகமாக செய்யுங்கள். சரீர ஒத்தாசை செய்வதும் நற்பலன் தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories