தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: விருச்சிகம்

new year palangal 2021 - 2026

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs - 2026

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com


8 vruchikam
8 vruchikam

விருச்சிகம் : (விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள் முடிய):

 சித்திரை முதல் ஆடி வரையில்:  வருட ஆரம்பம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8ல் மறைந்தாலும், சூரியன் 6ல் உச்சம் பெற்று உங்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை தருகிறார். புதன் சுக்ரனும், 3ல் இருக்கும் சனியும் பல்வித நன்மைகளை இந்த நாலு மாதத்தில் தருகிறபடியால் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும்

பெரிய சங்கடங்கள் இருக்காது. ஜென்ம கேது உடல் ரீதியான படுத்தலும், குடும்பத்தில் ஒரு அமைதி இன்மையை தரும் என்றாலும், 7ல் ராகு வாழ்க்கை துணைவரால் மருத்துவ செலவு, மன வேதனை என்று தரும்.

குரு ஜீவன ஸ்தானத்தை நேரடியாக பார்ப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும் சிக்கணம், யோசித்து செலவு செய்தல் போன்றவை பண நிலையை சரியாக வைத்திருக்க உதவும். சூரியன் செவ்வாய் சஞ்சாரமும் புதனின் வக்ர நிலைகளும் அதிகப்படியான நல்ல பலனை தரும். பொதுவாக இந்த 4மாதங்கள் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலை பளு இருக்கும். அதே நேரம் பதவியும் கிடைக்கும்.

கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். வாழ்க்கை துணைவரின் ஆலோசனைக்கு மதிப்பு தருவதும் நல்ல பலனைத்தரும். சொந்த தொழில் செய்வோர் கணக்குவழக்குகளையும், தொழிலாளர் காப்பீடு முறையும் சரியாக வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது.

கொஞ்சம் ஆறுதலாக வீடுவாங்க முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும். திருமணம், சுபநிகழ்வுகளால் மனம் ஆறுதல் அடையும். பரவாயில்லை என்பதாக இந்த நாலுமாதங்கள் இருக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: சூரியன் 10,11ல் வரும் இரண்டு மாதமும் முன்னேற்றம் இருக்கும். ராசிநாதனும் அவ்வாறே வருவதால் முன்பிருந்த சங்கடங்கள், தடைகள் மன வருத்தங்கள் யாவும் நீங்கி ஒரு புத்துணர்ச்சி உண்டாகும். உழைப்பில் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். குருவின் பார்வையும் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் பணவரவை அதிகரிக்க செய்யும். இல்லத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் குழந்தைகளால் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் மகிழ்ச்சி பெருகும். மேலும் உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வும் அலுவலகத்தில் வைத்திருந்த கோரிக்கைகள் நிறைவேறுதலும், வேறு உத்தியோகம், வெளிநாடு முயற்சிகள் இப்பொழுது நல்ல பலனை தந்து நோக்கத்தை நிறைவேற்றுவதால் அப்பாடா என்று பெருமூச்சு விட துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும். தாமதமான திருமணம் புத்திரபாக்கியம் கைகூடும். பிரிந்த தம்பதிகள் குடும்பம் ஒன்று சேரும் பொதுவில் இந்த 4 மாதங்கள் அதிக நன்மை இதில் சேமிக்கும் பழக்கத்தை கொண்டால் அடுத்துவரும் காலங்கள் சிரமம் குறையும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: குரு பங்குனியில் 5ல் ப்ரவேசம், ராகு 6ல், கேது 12ல் இது துக்கத்தை குறைக்கும். இதுவரை தடைபட்டு வந்த முயற்சிகள் யாவிலும் வெற்றி, இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் இதுவரை இருந்துவந்த மன அழுத்தம் முற்றிலுமாக நீங்கி அவர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு, நல்ல வேலை கிடைத்தல் என்று மனதில் நினைத்தது நிறைவேறும். சொந்த தொழில் செய்யும் அனைவருக்கும் இது ஏற்ற காலம். லாபம் பெருகும். எதிரிகள் மறைவர், கடன் தொல்லை முற்றிலுமாக நீங்கும். தொழில் விரிவாக்கம் நன்றாக நடை பெறும். சிலருக்கு புதிய சொந்த தொழில் முனையும் வாய்ப்பு கைகூடு ஆர்டர்களும் நிறைய வரும். விவசாயத்தில் விளைச்சல் அதிகமாகும். வீட்டின் பேரில் பணம் கட்டி யிருந்து மிகுந்த தாமதம் ஆகி கொண்டிருந்தால் அது இப்பொழுது திர்த்து வீடு கைக்கு வரும். நண்பர்கள் உறவினர்கள் சமூகம் இடையே நல்ல பெயர், அந்தஸ்து உண்டாகும். நெருக்கம் கூடும். புதிய முயற்சிகளுக்கு இவர்கள் துணை இருப்பர். பணவரவு தாராளம். பொதுவில் இந்த வருடம் அதிகப்படியான நன்மைகள் இருக்கு. இடையில் சில சங்கடங்கள் இருக்கும். பொறுமை நிதானம் பெரியோர்கள் ஆலோசனைபடி நடப்பது என்று இருந்தால் பாதிப்பில்லை

ப்ரார்த்தனைகள் : ராசிக்குறிய முருகனை வழிபடுவது அருகில் உள்ள முருகர் கோயிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வது விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது, நாம ஜெபம் செய்வது முடிந்த வரை தான தர்மங்களை செய்வது பொறுமை அமைதி எப்பொழுதும் இறைத்யானம் இவை இருந்தால் இந்த வருடத்தை சுலபமாக கடந்துவிடலாம். கோபத்தை குறையுங்கள் அதற்கு முருகனின் நாம ஜெபம் நிச்சயம் உதவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

Entertainment News

Popular Categories