29 C
Chennai
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2020

பஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - நவ.24தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...
More

  வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

  புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  நவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  சென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

  தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.

  செல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது!

  செல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது! Source: Vellithirai News

  சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….

  சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News

  இனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….

  இனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News

  துபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்

  துபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

  குரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் முடிய)

  gurupeyarchi-2020

  ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
  குரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷப ராசி
  (கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் முடிய)

  rishabham rasi
  rishabham rasi

  குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

  வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

  திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

  அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

  rishabam2021table
  rishabam2021table

  குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

  குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

  குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

  குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
  சனி –  மகரத்தில்
  ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்
  மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

  கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
  மேஷம் 24.12.2020  
  ரிஷபம் 22.02.2021  
  விருச்சிகம்  27.11.202011.12.2020
  தனூர்16.12.2020 17.12.202004.01.2021
  மகரம்14.01.2021 05.01.202128.01.2021
  கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
  மீனம்15.03.2021 01.04.202117.03.2021

  பொது : குரு பகவான் ராசிக்கு 9ல் சஞ்சாரம் உடன் சனியும், ஆயுள் தீர்க்கம், இதுவரை பட்ட கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும், இல்லத்தில் குழந்தை செல்வம், புதியவரவாக இருக்கும். பரந்தமனப்பாண்மை, தர்மகுணம், மந்திர உபதேசம் பெறுதல், சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம், பொருளாதார நிலை மேம்படுதல் இல்லத்தேவைகள் பூர்த்தியாகுதல் என்று இருக்கும். மேலும் ராசிநாதன் சுக்ரன் & 7க்குடைய செவ்வாய் மற்றும் சனி மூவரும் இந்த குரு சஞ்சாரம் முழுவதுமே யோக பலன்களை தருகிறார்கள் ஆடல் பாடல் கேளிக்கை விருந்துண்ணல், சொத்துவாங்குதல், வீடு வாங்குதல் இட மாற்றம், சுப விரயங்கள் என்று நன்றாகவே இருக்கும் நடுவில் ஜனவரி மாதம் முழுவதும் கொஞ்சம் மந்தம் அல்லது சில சங்கடங்கள் உறவினர் நண்பர்களால் ஏற்படும் நிதானம் தேவை. மற்றபடி புதன் சூரியன் ராகு கேதுவும் ஓரளவு நன்மை செய்கிறபடியால் நன்றாகவே குருபெயர்ச்சி இருக்கும்.

  குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் சில சில சண்டைகள் இருந்து கொண்டிருக்கும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, ராகு கேதுவால் வீண் விரயம், புதனும் புத்தியை மந்தப்படுத்தி பிரச்சனைகளை கொடுத்து கொண்டிருப்பார்கள், எதிலும் கவனமும் நிதானமும் தேவை மகிழ்ச்சி அதிகரிக்கும் செயல்கள் நடக்குபோதும் நிதானம் தேவை, பிள்ளைகளாலும் ப்ரச்சனை வரலாம்.

  ஆரோக்கியம் : மன ரீதியான பாதிப்பு இருக்கும். 7ல் கேது வாழ்க்கை துணைவரின் உடல் நலம் பாதிக்கப்படும். தகுந்த மருத்துவ ஆலோசனை படி நடப்பது நல்லது. 9ல் சனி ஆட்சி எனினும் கேது பார்வை தாய் தந்தையர் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. இஷ்ட தெய்வ ப்ரார்த்தனை ஜபம் செய்வது நல்லது.

  உத்தியோகம் : பதவி உயர்வு சம்பள உயர்வு என்று ஒருபக்கம் இருந்தாலும் வேலை பளுவும் அதிகரிக்கும். தற்காலிக வேலை செய்வோர், தினக்கூலிகள், கடைகள் மாதிரி வேலை செய்வோர் வருமானம் குறையலாம், பத்திரிகை டிவி போன்றவற்றில் வேலைசெய்வோர் கவனமுடன் இருக்கவும். ஒருபக்கம் பதவி சம்பளம் என்று கிடைத்தாலும் உடன் வேலைசெய்வோரால் பெயர் கெடலாம் அல்லது வேலை போகலாம். அயல் நாட்டு வேலைகள் செய்வோர் நிதானம் தேவை, புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பொதுவில் பொறுப்பு, நிதானம் இவற்றை கடைபிடித்தால் நல்லது

  சொந்த தொழில் /வியாபாரம் : ஆடை ஆடம்பரபொருள், தரகுதொழில், அரசாங்க கான்ட்ராக்டர்ஸ், ரயில், போக்குவரத்து துறை, ட்ராவல்ஸ், டூரிஸ்ட், ஃபோட்டோ வீடியோகிராபிக்ஸ், அனிமேஷன் போன்ற தொழில் செய்வோர் நல்ல வளர்ச்சி பெறுவர், அதே நேரத்தில் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும், போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டும். எதிரிகளை சமாளிக்க கொஞ்சம் போராட வேண்டி இருக்கும். வங்கி கடன் உதவியை தவிர்ப்பது நல்லது, அரசுடன் மோதல் போக்கு வேண்டாம்.

  விவசாயி : செவ்வாய் மற்றும் சனி கொஞ்சம் சங்கடத்தை கொடுக்கும், இருந்தாலும், குரு சுக்ரன், சூரியன் நன்மை செய்வதால் வருவாய் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தாருடன் மோதல் வேண்டாம். வழக்குகளில் நிதானம் தேவை, சனி வழக்குகளை இழுத்தடிப்பார் அல்லது புதிய வழக்குகள் உண்டாகும். அதேநேரம் விளைச்சலால் வருமானம், புதிய சொத்து வாங்குதல் இல்லத்தில் சுப நிகழ்வுகள் என்று நடக்கும். ராகுகேதுவால் மன குழப்பம் உடல் ஆரோக்கியம் பாதிப்பு என்று இருக்கும் கவனம் தேவை.

  அரசியல்வாதிகள் : ஒருபக்கம் கட்சி மேலிட ஆதரவு இருந்தாலும் எதிரிகளின் சூழ்ச்சி சில பாதிப்புகளை தரும், தொண்டர்களை தக்கவைக்க செலவு அதிகரிக்கும். இருந்தாலும் புகழ் செல்வாக்கு என்று ஒருபக்கம் இருக்கும். கொஞ்சம் கவனமாக வார்த்தை ப்ரயோகம் செய்வது நல்லது.

  மாணவர்கள்: கவனமுடன் படிப்பது நல்லது. மதிப்பெண்கள் கிடைக்கும் நல்ல பெயர் இருக்கும் இருந்தாலும் புதன் கேது மந்த நிலையை உருவாக்கும் போட்டிகள் கடும் முயற்சிக்கு பிறகே வெற்றி தரும். பெற்றோர் ஆசிரியர் ஆலோசனை நல்லது.

  திருமணம்: 7ல் கேது இருக்கிறது. குருவை பார்க்கிறது. குரு பார்வை ராசிக்கு இருப்பதால் தடைகளை மீறி திருமணம் வரன் அமைந்து விடும். தனிப்பட்ட ஜாதகத்தில் தசை புக்திகள் சாதகமாயிருந்தால் நிச்சயம் திருமணம் அமையும்

  குழந்தை : 5க்குடைய புதன் வலு குறைவு இருந்தாலும் 5ம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் நிச்சயம் சிலருக்கு புத்திரபாக்கியம் ஏற்படும்.

  பெண்கள் : ஏற்றமான காலம்  ஆடை ஆபரண சேர்க்கை, விருப்பங்கள் நிறைவேறுதல், குடும்பத்தில் ஒற்றுமை, உத்தியோகம், சொந்த தொழில் வருமானம் அதிகரிப்பு, என்று இருந்தாலும் பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும். அக்கம்பக்கத்தாருடனும், உறவுகளுடனும் விவாதம் செய்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உத்தரவுப்படி நடப்பது நல்லது. சொந்த தொழில் செய்வோர் தொழிலாளிகளை அனுசரித்து போக வேண்டும். நன்மை தீமை சரிசமமாக இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

  ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

  ravisarangan-lakshminarasimhan
  ravisarangan-lakshminarasimhan

  குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, Block1, Alsa Green Park Appartment
  Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
  Chrompet, Chennai – 600 044
  Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
  Email : mannargudirs1960@gmail.com.

  தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

  https://dhinasari.com/astrology/guru-peyarchchi

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

  Latest Posts

  வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

  புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

  கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

  பஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம்  - நவ.24தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,036FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  966FollowersFollow
  17,300SubscribersSubscribe

  வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

  புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

  நவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  சுபாஷிதம்: கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாது!

  சுபாஷிதம்…. ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்,:, பிஎஸ் சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாது!செய்யுள்:,கதானுகதிகோ லோகோ ந லோக: பாரமார்திக: !கங்கா சைகத லிங்கேன நஷ்டம் மே தாம்ரபாஜனம் !!பொருள்:உலகத்தில் ஒருவர்...

  சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

  கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

  சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,

  சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!

  தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.

  ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

  பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட

  பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

  திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது

  காந்தியின் 3 குரங்குகளுடன் இந்த 5 குரங்குகளின் கதையும் கேளுங்க! பிறகு யோசிங்க!

  மூன்று குரங்குகளாக இருக்கும் அனைத்து இந்துக்களிடமும் எனது வேண்டுகோள் , நீங்கள் சுயமாக சிந்திக்க முடிந்தால், விரைவில்
  Translate »