29 C
Chennai
வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2020

பஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...
More

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  டிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  மதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்!

  இந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை

  வைகை ஆற்றில் வெள்ள அபாயம்! மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

  வைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  அவ்வளவு பாசக்காரரா சூர்யா?… ரசிகர்களுக்கே இது தெரியாது…

  தமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் என பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’படத்தில்...

  தங்கச்சி மகனுடன் காரில் ஊர் சுற்றும் சிம்பு – அவரே வெளியிட்ட வீடியோ

  நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகரையும் தாண்டி நடிகர் சிம்பு பாசக்காரப் பையன் என்பது பலருக்கும் தெரியாது....

  டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை?.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார்.அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள்...

  கே.ஜி.எஃப் இயக்குனரோடு இணையும் பிரபாஸ் – மாஸ் கிளப்பும் ஃபர்ஸ்ட்லுக்

  தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதேபோல், 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர்...

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

  குரு பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய)

  gurupeyarchi-2020

  ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
  குரு பெயர்ச்சி பலன்கள் – கும்ப ராசி
  (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய)

  kumbham rasi
  kumbham rasi

  குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

  வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

  திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

  அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

  dhanushu2020table

  குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

  குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

  குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

  குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
  சனி –  மகரத்தில்
  ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

  மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

  கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
  மேஷம் 24.12.2020  
  ரிஷபம் 22.02.2021  
  விருச்சிகம்  27.11.202011.12.2020
  தனூர்16.12.2020 17.12.202004.01.2021
  மகரம்14.01.2021 05.01.202128.01.2021
  கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
  மீனம்15.03.2021 01.04.202117.03.2021

  பொது : இதுவரை லாபத்தில் இருந்த குருபகவான் இனி விரயத்தில் ஆனால் அது சுப விரயம் அதாவது சுப செலவுகள், திருமணம், குழந்தைகளின் கல்வி செலவு, தீர்த்த யாத்திரை செலவு அதோடு வாகன பழுது பார்த்தல், வாகனம் வாங்குதல் என்று செலவை தரும். கொஞ்சம் மருத்துவ செலவையும் தரும் காரணம் வியாதிகள் கொஞ்சம் அதிகமாகும். மற்ற கிரஹங்களில் 2ல் இருக்கும் செவ்வாய் 24.12.2020 வரையிலும் பின் 22.02.20 முதலும் சிறு சிறு பிரச்சனைகள் குடும்பத்தில் அமைதி குறைவு வருமானம் பின்னடைவு என்று தருவார் ராகு மன அமைதியை குலைப்பார் குழப்பம் உண்டாகும் நண்பர்கள் உடன் வேலை செய்வோரால் அவ்வப்பொழுது தொல்லை வரும். சூரியன் சில மருத்துவ செலவை தருவார். ஆனால் கேது உட்பட மற்ற கிரஹங்கள் புகழ், வருமானம், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் அதனால் உறவுகளின் நெருக்கம் புதிய சொத்துகள் வாங்குதல் சமூக அந்தஸ்து கௌரவம் உயர்தல் என்று நன்றாகவே இருக்கும். புதன் டிசம்பர் வரை மன உளைச்சல் முயற்சியில் தோல்வி என்று கொடுத்து பின் நல்லதை செய்யும். பொதுவில் நன்மை அதிகம் கெடுதல் குறைவு.

  குடும்பம்: கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் மன உளைச்சல்கள் கவன குறைவு, வார்த்தை தடிப்பு என்று சில சங்கடங்களும், இல்லத்தில் சுப நிகழ்வுகள் புதிய வரவு, பெற்றோர்கள் ஆசிகள், உறவுகளின் நெருக்கம் புதிய வீடு குடிபுகுதல் பிள்ளைகளால் மகிழ்ச்சி, தாயார் வழியில் மன கஷ்டம் வரலாம். தேவைகளை பூர்த்தி செய்ய அதிக உழைப்பு தேவைப்படும்.

  ஆரோக்கியம் : ராகு, சனி குரு மூவரும் வைத்திய செலவை கொடுப்பர். ராகு மன உளைச்சல் தாய் வழி துயரம், மந்தமான நிலை, அதனால் உடல் பாதிப்பு குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பாதித்தல் என்று தருவார். குரு செலவை சமாளிக்க வைப்பார். சூரியனும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் உடல் பாதிப்பை தருவார். கவனம் தேவை மருந்து எடுத்து கொள்வதை தவிர்க்க கூடாது.

  உத்தியோகம் : சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கலாம் பத்துக்குடையவர் பத்தில் ஆட்சி டிசம்பர் வரை, மேலும் செவ்வாயின் 8ம் பார்வை பதவி உயர்வு சம்பள உயர்வை தரும் இருந்தாலும் ராகு வேலை பளு, மேலதிகாரிகளுடன் மோதல், அவசரபடுதல், அதனால் அவஸ்தை என்று கொடுப்பார். இடமாற்றம் இருக்கும். இன்ஷூரன்ஸ், ஆடை வடிவமைப்பு, நிர்வாக துறை, வாகனம், எழுத்து, அச்சிடுதல், போன்றவற்றில் வேலைசெய்வோருக்கு முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களுக்கு பரவாயில்லை என்று இருக்கும். பிப்ரவரிக்கு மேல் நல்ல முன்னேற்றம் உண்டு.

  சொந்த தொழில் / வியாபாரம் : பிரிண்டிங்க் ப்ரஸ், எழுத்தாளர், கணக்கர், ஸ்க்ராப் டீலர், எண்ணை வியாபாரம், அடுப்பு சம்பந்தப்பட்ட தொழில், பலசரக்கு தொழில் போன்றோருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எல்லோருக்கும் ஓரளவு நன்மைகள் வருமானம் பெருகுதல் இருந்தாலும், தொழிலாளர் வகையில் மருத்துவ செலவு, அரசாங்கத்தால் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, வீண் பண விரயம் என்றும் இருக்கும். கவனம் தேவை

  விவசாயி : செவ்வாயும் சூரியனும் நன்றாக இல்லை வருவாய் ஓரளவு இருக்கும் வைத்திய செலவுகள், குடும்பத்தில் மன அமைதி குறைதல் பிள்ளைகளால் செலவு என்று இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். புதிய முயற்சிகள் அதிக சிரமத்துக்கு பின் வெற்றி கிட்டும். வழக்குகள் தாமதம் ஆகும் புது வழக்குகளும் உண்டாகும். கவனம் தேவை நிலம் வாங்குவதை யோசித்து செய்யவும்.

  அரசியல்வாதி : சொந்த கட்சியில் மதிப்பு இல்லை என்று வேறு கட்சி மாறினாலும் அங்கும் ஓரளவு பணம் கிடைக்கும், அதிக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களை தக்க வைக்க பாடு படனும், சில சமயம் நல்ல பெயர் கிடைக்கும். பொதுவில் அமைதி காப்பது யோசித்து செயல்படுவது நல்லது. வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை

  மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். ஆனால் மனம் உடல் ஒத்துழைக்காது ராகு,சூரியன் செவ்வாய் இவை பிணியை மன சோர்வை தரும் படிப்பில் நாட்டம் குறையும், தியானப்பயிற்சி பெற்றோர் ஆசிரியர் ஆலோசனை, நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம், பொறுமை இவை இருந்தால் ஓரளவுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டு முயற்சி பிப்ரவரிக்கு மேல் நடக்கும்.

  திருமணம் : தனிப்பட்ட ஜாதகத்தில் 7க்குடையவர் தசை நடந்தால் குரு சம்பந்தம் இருந்தால் வாய்ப்புள்ளது. மேலும் 7க்குடைய சூரியன் குருவுடன் சேர்ந்து இருக்கும் பிப்ரவரி மார்ச்சில் வரன் அமைய வாய்ப்பு

  குழந்தை : ஜனன ஜாதகத்தில் 5க்குடையவர் 5ஐ பார்ப்பவர் குரு சம்பந்தம் இருந்து அதன் தசைகள் நடந்து கொண்டிருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு

  பெண்கள் : பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருக்கும். வார்த்தைகள் விடுவதில் கவனம் தேவை, உழைப்பு அதிகம் இருக்கும் பலன் சொற்பமாக இருக்கும். பணவரவு பரவாயில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல் சம்பந்தப்பட்ட ப்ரச்சனைகள் மருத்துவ செல்வுகள் என்று இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்ப்புகள் பலத்த முயற்சிக்கு பின் நிறைவேறும். இடமாற்றம் உண்டு. சொந்த தொழில் செய்வோர் ஓரளவு லாபம் பார்ப்பர் இருந்தாலும் போட்டிகளை சமாளிக்க போராடனும். சேமிப்பை அதிகப்படுத்துவது நல்லது.

  ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

  ravisarangan-lakshminarasimhan
  ravisarangan-lakshminarasimhan

  குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, Block1, Alsa Green Park Appartment
  Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
  Chrompet, Chennai – 600 044
  Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
  Email : mannargudirs1960@gmail.com.

  தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

  https://dhinasari.com/astrology/guru-peyarchchi

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

  உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  சுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்!

  நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  பஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...

  வன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு: 30 வருட வரலாற்று துரோகம் சரி செய்யப்பட வேண்டும்!

  வரலாற்று துரோகத்தை வன்னிய பெருமக்களுக்கு இழைத்தவர் கருணாநிதி ! போராடிய மக்களுக்கு முன்பு
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,040FansLike
  78FollowersFollow
  73FollowersFollow
  972FollowersFollow
  17,300SubscribersSubscribe

  பழைய பாதையில்… பாமக! ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்!

  தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.

  டிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  மதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்!

  இந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை

  சுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்!

  நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்

  சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

  கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்

  “தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”! வீடுதோறும் பிரசாரம்!

  இந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு!

  பழைய பாதையில்… பாமக! ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்!

  தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.

  சகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது!

  கலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே!
  Translate »