ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம் ராசி
(புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.
அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.
குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.
குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.
குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.
குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
சனி – மகரத்தில்
ராகு – ரிஷபம் , கேது – விருச்சிகம்
மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி
கிரஹம் —–> | சூரியன் | செவ்வாய் | பதன் | சுக்ரன் |
மேஷம் | 24.12.2020 | |||
ரிஷபம் | 22.02.2021 | |||
விருச்சிகம் | 27.11.2020 | 11.12.2020 | ||
தனூர் | 16.12.2020 | 17.12.2020 | 04.01.2021 | |
மகரம் | 14.01.2021 | 05.01.2021 | 28.01.2021 | |
கும்பம் | 13.02.2021 | 26.01.2021 | 21.02.2021 | |
மீனம் | 15.03.2021 | 01.04.2021 | 17.03.2021 |
பொது : இந்த முறை ராசிநாதனுடன் இணைந்து குரு மகரத்தில் நுழைகிறார். மேலும் நேரடியாக ராசியை பார்க்கிறார். சனியும் பார்க்கிறார் 7,8க்குடையவர் மேலும் ராகு பார்வை லாபம், அடுத்த நாலரை மாதமும் சூரியன், புதன் செவ்வாய் சஞ்சாரம் மிகுந்த நன்மை, இதுவரை இருந்துவந்த துன்பங்கள் முற்றிலுமாக நீங்கும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் நடக்கும். நல்ல படித்த வாழ்க்கை துணை அமைவார். பொதுவாக வாழ்க்கை துணைவரால் மகிழ்ச்சி அதிகம் ஆகும் பொருளாதார நிலை லாபத்தை குரு நோக்குவதால், தைரியம் கூடும் குருவின் 9ம் பார்வையால். நினைத்தது நடக்கும். திட்டங்கள் நிறைவேறும். புதியவீடு வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, சமூக அந்தஸ்து கூடும். பொதுவில் மிக அதிகமான நன்மைகள் உண்டாகும்.
குடும்பம்: கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய வரவுகளால் பொருளாதார சமூக அந்தஸ்துகள் உயரும். செலவுகள் சுபமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரிவுகள் நீங்கி உறவுகளின் நெருக்கம் அதிகமாகும். நண்பர்கள் உறவினர்களால் லாபம் உண்டாகும்.
ஆரோக்கியம் : மகிழ்ச்சி அதிகரிப்பதால் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். டிசம்பர் வரை 9ல் இருக்கும் செவ்வாயும் வைத்திய செலவை குறைத்து பெற்றோர்கள் உட்பட குடும்ப அங்கத்தினர்களின் வியாதிகளை குறைக்கும்.
உத்தியோகம் : புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம், பதவி சம்பள உயர்வு, மேலதிகாரிகளிடம் நல்லபெயர், சக தொழிலாளி ஒத்துழைப்பு, தினக்கூலி உட்பட அனைவருக்கும் வருமானம் வந்து கொண்டிருக்கும். கடந்த காலத்தில் எதிர்பார்த்த விரும்பிய இடமாற்றம் இப்பொழுது நடக்கும். அரசுதுறையில் பணிபுரிவோருக்கு ஏறுமுகம் வழக்குகள் பணி இடைநீக்கம் என்று இருந்தோருக்கு அவை சுமூகமாக முடிந்து வேலை தொடரும் பணம் வரும்.
சொந்த தொழில் / வியாபாரம் : தொழில் விஸ்தரிப்பு, புதிய தொழில் தொடங்குதல்,என்று நன்றாகவே இருக்கும், நீர் பால் மளிகை, முத்து, முடி திருத்தும் தொழில், அழகு நிலையங்கள், ஷேர்மார்கெட், ட்ராவல்ஸ், போக்குவரத்து, போலீஸ், ப்ரோகிதர்கள் போன்றோர் சிறப்பு பலனை பெறுவர் மற்ற தொழில் செய்வோருக்கும் நல்ல நிலைதான் பெரிய பாதிப்புகள் இருக்காது முயற்சித்த வங்கி கடன் அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
விவசாயி : விளைச்சல் பெருகும், கால்நடையால் வருமானம் பெருகும், புதிய நிலம் வாங்குதல், வழக்குகளில் வெற்றி, இல்லத்தில் மகிழ்ச்சி, எல்லோருடனும் சுமூக உறவு என்று நன்றாகவே இருக்கும்.
அரசியல்வாதி : விரும்பிய பதவி, எதிர்பார்த்த புகழ் கிடைக்கும் தொண்டர்கள் மக்கள் இடையே செல்வாக்கு உயரும், வழக்குகள் சாதகம் ஆகும். உற்சாகம் பெருகும். பணப்புழக்கம் தாராளம். மறைமுக வருமானமும் அதிகரிக்கும்.
மாணவர்கள் : நன்றாக படிப்பார்கள் 27.11.2020 முதலே விரும்பிய கல்லூரி, அயல்நாட்டு படிப்பு, மதிப்பெண்கள் நிறைய கிடைக்கும், எல்லோருடைய பாராட்டும். நண்பர்களால் நன்மையும். போட்டி பந்தயங்களில் வெற்றியும் உண்டாகும்.
திருமணம் : குரு ராசியை பார்ப்பதும் 7க்குடையவருடன் சேர்ந்து இருப்பதும் சாதகமான தசைபுக்திகள் நடந்தால் இந்த பெயர்ச்சியில் வரன் தேடிவந்து அமைந்து திருமணம் முடிந்துவிடும்.
குழந்தை : 5க்குடையவர் குருவீட்டில் அமர்ந்து இருக்கிறார். குரு லாபத்தை பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சியில், 5க்குடையவர் 5ஐ பார்ப்பவர் அதில் இருப்பவர் தசைபுக்திகள் நடந்தால் நிச்சயம் புத்திரபாக்கியம் உண்டு.
பெண்கள் : நல்லகாலம் நினைத்த காரியம் நடக்கும். எதிர்பாரா இனங்களில் வருமானம், சமூக அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவி உயர்வு, சொந்த தொழிலில் நல்ல நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்று பலவிதத்திலும் நன்மை உண்டாகும். போட்ட திட்டங்கள் நிறைவேறும். உடன் இருப்போர், குடும்ப அங்கத்தினர் ஆதரவு இருந்துகொண்டிருக்கும்.
ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.
குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block1, Alsa Green Park Appartment
Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
Chrompet, Chennai – 600 044
Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
Email : [email protected].
தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…!
https://dhinasari.com/astrology/guru-peyarchchi