Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

gurupeyarchi-2020

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம் ராசி
(உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)

makaram rasi
makaram rasi

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

dhanushu2020table

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
சனி –  மகரத்தில்
ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : பொதுவாக ஜென்ம குரு சிறைவாசம் என ஒரு பாடம் உண்டு ஆனால் குரு பெயர்ச்சியாகும் போது புதனுக்கு 4ல் இருப்பதால் நல்ல பன்களை சீக்கிரத்தில் தருபவர் ஆகிறார். மேலும் அவரின் 5,9 பார்வைகள் முயற்சியில் வெற்றி, எதிர்பார்த்த விஷயங்கள் நடத்தல் என்று நன்றாகவே இருக்கும் மேலும் ராசியதிபதி ராசியில் இருப்பது பலம் அவரின் 3, பார்வைகளும் வருமானத்தையும், தைரியத்தையும் தரும். மற்ற கிரஹங்களில் செவ்வாய், சுக்ரன் ராகு, புதன் அதிக நன்மையும் சூரியன், கேது அவ்வப்போது நன்மையும் தருகின்றனர். பொருளாதாரம் நன்றாக இருக்கும் அயல்நாட்டு வாழ்க்கை சிலருக்கு ஏற்படும். மேலும் ஜென்மத்தில் குரு இருந்தாலும், சனி இருந்தாலும் இடமாற்றம் நிச்சயம். அதன்படி பணி நிமித்தம் அல்லது திருமணம் போன்றவற்றால் வேறு இடம் போகும் வாய்ப்பு உண்டாகும் மேலும் 4க்குடையவர் 4ல் வரும்போது அதாவது டிசம்பர் 24க்கு பின் 11ல் இருக்கும் நிலகாரகன் கேதுவை பார்பதாலும் வீடு யோகம் அமைந்து இடமாற்றம் உண்டாகும். சாமர்த்தியம் கூடும், ஆடை ஆபரண சேர்க்கை புனித யாத்திரைகளால் மகிழ்ச்சி என்று நன்றாகவே இருக்கும்.

குடும்பம்: கணவர் மனைவி ஒற்றுமை இருக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து இருப்பர், பிள்ளைகளால் பெருமை அவர்களின் திருமணம் போன்றவை, குழந்தை பாக்கியம் என்றும், புதிய வீடு குடிபோகுதல், அதன் மூலம் செல்வம் பெருகி மன அமைதி, சமூக அந்தஸ்து, உறவுகளால் நன்மை என்று நன்றாகவே இருக்கும். பெரிய சங்கடங்கள் கிடையாது.

ஆரோக்கியம் : சளி, நெஞ்சு எரிச்சல், உடல் சோர்வு, நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கும். வாழ்க்கை துணைவர், மற்றும் பெற்றோர் வழியிலும் மருத்துவ செலவுகள் இருக்கும். இருந்தாலும் அனைத்தும் ஒரு கட்டுக்குள் இருக்கும் பெரிய அளவில் இருக்காது. தியான பயிற்சி மனதை திடமாக வைக்க உதவும்.

உத்தியோகம் : சிலருக்கு புதிய பணி, அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். அதனால் இடமாற்றம் உண்டாகும் குடும்பத்தை பிரிந்து இருக்கலாம். வேலையில் உற்சாகம் இருக்கும். சினிமா, டிவி, அனிமேஷன், எழுத்து துறை காடுகள், விவசாய தொழிலாளர்கள், தினக்கூலிகள் போன்றோருக்கு வருமானம் பெருகும் வகையில் வேலை அமையும். நல்ல முன்னேற்றம் இருக்கும். பொதுவாக அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் இடமாற்றம் வேலையில் முன்னேற்றம் என்று இருக்கும்.

சொந்த தொழில் / வியாபாரம் : கலைத்துறை, ஆடம்பர பொருள் விற்பவர், நகை ஆபரண விற்பனையாளர்கள் , ஏற்றுமதி, இறக்குமதி, வாகனம், பலசரக்கு விற்பனை போன்ற தொழில் செய்வோர் நல்ல ஏற்றம் காண்பர், வேறு இடம் பெயர்வர் அல்லது வேறு இடத்தில் தொழில் தொடங்குவர். அனைத்து தொழில் செய்வோரும் வருமானம் பெருகி முயற்சியில் வெற்றி காண்பர் கொஞ்சம் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

விவசாயி : செவ்வாய் டிசம்பர் 24 தேதிக்கு மேல் வருமானத்தை பெருக்கும், மகசூல் நன்றாக இருக்கும், வீடுவாகன யோகங்கள் அமையும், வழக்குகள் சாதக தீர்ப்பு வரும், எதிராளி தொல்லை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் பணப்புழக்கம் தாராளம், வேறு இடம் குடிபெயறும் நிலை இருக்கும். அதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

அரசியல்வாதி : வேறு கட்சி அல்லது வேறு இடத்தில் போட்டியிடுதல் என்ற நிலை இருக்கும், செல்வாக்கு கூடும், தொண்டர்கள் ஆதரவு நிலைக்கும். இருந்தாலும் எதிரிகள் தொல்லை கொடுப்பர். இருந்தாலும் சாதூர்யத்தால் சமாளிப்பர், மேலிட ஆதரவு கூடும். நன்றாக இருக்கும்.

மாணவர்கள் : படிப்பில் அக்கறை உண்டாகும், வேறு இடம் கல்லூரி அயல்நாட்டு படிப்பு என்று சிலருக்கு இருக்கும். பெற்றோர் ஆசிரியர் பாராட்டை பெறுவார்கள் நல்ல மதிப்பெண்கள் , புதிய பாடம் என்று பெயர்ச்சி முழுவதும் நன்றாகவே இருக்கும்.

திருமணம் : ராசிக்கு 7ம் இடத்தை குரு பார்ப்பதால் தாமதம் ஆகிக்கொண்டிருந்த திருமணம் கைகூடும், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.

குழந்தை : 5ம் இடத்தை குரு பார்ப்பதாலும் 5க்குடையவர் சாதகமான சஞ்சாரம் என்பதாலும் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டு வெகுகாலமாக குழந்தை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த பெயர்ச்சியில் செவ்வாய், சுக்ரன் சனி குரு சாதகமாக இருப்பதால் விரைவில் குழந்தை உண்டாகும்.

பெண்கள் : மகிழ்ச்சி அதிகரிக்கும், தொல்லைகள் குறையும், குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவி நெருக்கம், புதியவீடு குடிபோகுதல், உத்தியோகத்தில் ஏற்றம், வேலையில் உற்சாகம், சொந்த தொழிலில் வருமானம் பெருகுதல், தொழில் விஸ்தரிப்பு சாதகம், ஆடை ஆபரண சேர்க்கை தீர்த்த யாத்திரைகள், விருந்து கேளிக்கைகள், உறவுகளின் நெருக்கம், நண்பர்களால் ஆதாயம், அரசாங்க ஆதரவு என்று நன்றாகவே இருக்கும்.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

ravisarangan-lakshminarasimhan
ravisarangan-lakshminarasimhan

குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block1, Alsa Green Park Appartment
Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
Chrompet, Chennai – 600 044
Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
Email : [email protected].

தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

https://dhinasari.com/astrology/guru-peyarchchi

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,142FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,775FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...