29 C
Chennai
திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020

பஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...
More

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

  திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  காவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்!

  செங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.

  அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

  மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...

  விரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி

  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...

  தளபதி 65 இயக்குனர் இவர்தான்! – வெளியே வந்த ரகசியம்

  மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...

  ஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி? – பரபரப்பு செய்தி

  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய)

  gurupeyarchi-2020

  ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
  குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிக ராசி
  (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய)

  viruchikam rasi
  viruchikam rasi

  குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

  வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

  திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

  அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

  vrichigam2020table
  vrichigam2020table

  குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

  குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

  குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

  குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
  சனி –  மகரத்தில்
  ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

  மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

  கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
  மேஷம் 24.12.2020  
  ரிஷபம் 22.02.2021  
  விருச்சிகம்  27.11.202011.12.2020
  தனூர்16.12.2020 17.12.202004.01.2021
  மகரம்14.01.2021 05.01.202128.01.2021
  கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
  மீனம்15.03.2021 01.04.202117.03.2021

  பொது : குரு பெயர்ச்சியின் ஆரம்பத்தில் ராசிநாதன் 5ல் வக்ரியாக, மேலும் 7ல் ராகு, ராசியில் கேது சூரியன் என்று. குரு 3ல் பெயர்ச்சியாகிறார் இதுவும் பெரிய நன்மைகளை தராது எனினும் கெடுதல் இல்லை பார்வையால் நன்மை. டிசம்பர் முதல் புதன் சுக்ரன் ராசியில் நன்மை தருவதாக அமைகிறது. 3ல் சனி ஆட்சியாக ஒரு தைரியத்தையும் முயற்சிகளில் வெற்றியையும் தருவார். போட்ட திட்டங்கள் வெற்றி பெறும். வழக்குகள் சாதகம் ஆகும், சுக்ரன் டிசம்பர் முதல் அளப்பறிய நன்மை செய்கிறார் ராசிநாதன் பிள்ளைகளின் கல்வி செலவையும் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகளையும் செய்வார், ஜனவரி முதல் புதன் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வார், பொருளாதார நிலையை உயர்த்துவார், குரு 5,9 பார்வைகளால் திருமணம், புத்திரலாபம், பூர்வீக சொத்துகள் கிடைத்தல் செல்வாக்கு உயர்தல் என செய்கிறார். ராகு, கேது, சூரியன் உடல் உபாதைகள் தொல்லைகள் மன கஷ்டங்களை அவ்வப்போது தருவார். பொதுவில் பல கிரஹங்கள் நன்மை செய்வதால் கெடுதல்கள் அதிகம் இராது.

  குடும்பம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை படுத்துவார்கள். புதிய சொத்து வாங்கலாம். இல்லதில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதன் மூலம் உறவுகள் பலப்படும். தடைபட்ட முயற்சிகள் வெற்றி பெற்று இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். அந்தஸ்து கூடும்.

  ஆரோக்கியம் : கேது,ராகு,சூரியன் சஞ்சாரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை உஷ்ணம், உடல் உபாதைகள் கண், வயிறு, கால், எலும்பு என்ற பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் ஆரோக்கியமும் பாதிக்க படும் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். தகுந்த ஆலோசனை தக்க வைத்தியம் எடுத்து கொண்டால் பெரிய பாதிப்புகள் இல்லை

  உத்தியோகம் : பத்துக்குடையவர் ராசியில், கெடுதல் பார்வைகளும் இல்லை டிசம்பர் 16 வரை டல்லாக சாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் பின் ஓரளவு வளர்ச்சி இருக்கும் சின்ன அளவில் பதவி உயர்வு சம்பள உயர்வு என்று இருக்கும். ஆனாலும் பொருளாதார சிக்கல் இருக்காது. பாய்லர் , கட்டுமான தொழில், வீட்டுவேலைகள், சமையல் போன்ற துறையில் பணி புரிபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது ஆரோக்கியம் பாதிக்கலாம் அல்லது விபத்துகள் ஏற்படலாம். விரும்பிய இடமாற்றம் அல்லது நல்ல வேலை என்பது ஜனவரிக்கு பின் ஏற்படும். அதுவரை பொறுமை தேவை

  சொந்த தொழில் / வியாபாரம் : பொருளாதாரம் நன்றாக இருக்கும் வளர்ச்சி இருக்கும். புதிய தொழில்விஸ்தாரணம் ஜனவரிக்கு மேல் தொடங்குவது நன்மை தரும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்கவும். போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். தொழிலாளர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். விபத்துகளால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் கவனம் தேவை.

  விவசாயி : மகசூல் நன்று வருமானம் பெருகும். இருந்தாலும் உடல் பாதிப்பு மருத்துவ செலவு, கால்நடைகளால் மருத்துவ செலவு என்று இருக்கும். வழக்குகள் சாதகம் ஆகும். புதிய நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பண பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

  அரசியல்வாதி : பதவிகளை எதிர்பார்த்தால் தாமதம் ஆகும் அல்லது பேருக்கு பதவி என்ற நிலை இருக்கும். செலவுகள் அதிகம் ஆகும். தொண்டர்களால் பண விரயம் ஆகும். வெளியூர் பயணங்களை கவனத்துடன் கையாள்வது நன்மை தரும். வாகன விபத்துகள் உண்டாகலாம்.

  மாணவர்கள் : புதன் மந்த நிலையை தரும் பிப்ரவரிக்கு மேல்தான் படிப்பில் அதிக அக்கறை ஏற்படும். மதிப்பெண்கள் கூடும். வெளிநாட்டு படிப்பு முயற்சி விரும்பிய பாடம், கல்லூரி பிப்ரவரிக்கு மேல் நிறைவேறும்.

  திருமணம் : 7ம் இடத்துக்கு குருவின் பார்வை இருப்பதால் திருமண வரன் வந்து விரைவில் திருமணம் முடிந்துவிடும். ஜனன ஜாதகத்திலும் 7க்குடையவர் தசா புக்திகள் அல்லது குரு,சுக்ர புக்திகள் நடந்தால் திருமணம் கைகூடும்.

  குழந்தை : 5க்குடையவர் 3ல் இருந்தாலும், சனியின் பார்வை சேர்க்கை பெறுவதால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ராகுவின் பார்வை இருக்கு அதனால் ராகுவும் புத்திரபாக்கியத்தை தரும்.

  பெண்கள் : மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பெரிய பிரச்சனைகள் இருக்காது கணவர் உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கும் வைத்திய செலவுகள் இருக்கும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இல்லை. உத்தியோகத்தில் சுமாரான நிலை இருந்தாலும் பொருளாதார சிக்கல் இருக்காது. பணவரவு தாராளம், சொந்த தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் புதிய வரவுகள் மன நிம்மதியை தரும்.

  ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

  ravisarangan-lakshminarasimhan
  ravisarangan-lakshminarasimhan

  குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, Block1, Alsa Green Park Appartment
  Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
  Chrompet, Chennai – 600 044
  Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
  Email : mannargudirs1960@gmail.com.

  தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

  https://dhinasari.com/astrology/guru-peyarchchi

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

  உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

  மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...

  விரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி

  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...

  தளபதி 65 இயக்குனர் இவர்தான்! – வெளியே வந்த ரகசியம்

  மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...

  ஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி? – பரபரப்பு செய்தி

  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,040FansLike
  78FollowersFollow
  73FollowersFollow
  969FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சுபாஷிதம்: ஆபத்தில் தைரியம்!

  சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்!செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...

  டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

  திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  ராதையும் கிருஷ்ணனும்! கார்த்திகை பௌர்ணமி மகிமை!

  கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்

  திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  பழனி கோயிலில் தீப விழா! நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

  திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
  Translate »