ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
குரு பெயர்ச்சி – மேஷ ராசி பலன்கள்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் முடிய)
குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.
அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.
(செவ்வாய்) 21.21.01 | ராகு 25.57.36 | ||
லக்னம் 07.51.24 | |||
சனி 03.21.23 சந்திரன் 11.47.02 குரு 00.00.00 | |||
கேது 25.57.36 சூரியன் 04.16.53 | சுக்ரன் 04.18.28 புதன் 18.09.12 |
குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.
குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.
குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.
குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும்
பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
சனி – மகரத்தில்
ராகு – ரிஷபம் , கேது – விருச்சிகம்
மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி
கிரஹம் —–> | சூரியன் | செவ்வாய் | புதன் | சுக்ரன் |
மேஷம் | 24.12.2020 | |||
ரிஷபம் | 22.02.2021 | |||
விருச்சிகம் | 27.11.2020 | 11.12.2020 | ||
தனூர் | 16.12.2020 | 17.12.2020 | 04.01.2021 | |
மகரம் | 14.01.2021 | 05.01.2021 | 28.01.2021 | |
கும்பம் | 13.02.2021 | 26.01.2021 | 21.02.2021 | |
மீனம் | 15.03.2021 | 01.04.2021 | 17.03.2021 |
பொது: ராசிக்கு 10ல் பெயர்ச்சி ஆகிறார். மகரத்துள் நுழையும் போது கூடவே சனியும் சந்திரனும் இருக்கிறார்கள். பத்தாம் இடம் என்பது ஜீவன ஸ்தானம். அங்கு குருஅமர்கிறார். ஏப்ரல் 5,2021 வரை, அங்கு அமர்ந்து 5ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும், 7ம் பார்வையாக சுகம் தாயார் ஸ்தானத்தையும், 9ம் பார்வையாக ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார். நன்மைகள் அதிகம் நடக்கும். காரணம், 10க்குடைய சனி உடன் இருக்கிறது, மேலும் புதன், சுக்ரன் நன்மை தரும் விதத்திலும் குருவுடன் சாதகமான சஞ்சாரம். பொதுவா குரு 10ல் இருந்தால் எடுத்த காரியம் வெற்றிபெறும். வீட்டில் சுபம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். வசதிகள் வந்து சேரும்.
குடும்பம் : மகிழ்ச்சி அதிகரிக்கும். டிசம்பர் முதல் ஃபிப்ரவரி 21 வரை பல கிரஹங்கள் அனுகூலமாக இருப்பதாலும் ராசிநாதன் ராசியில் சஞ்சரிப்பதாலும் கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளால் பெறுமை அவர்கள் கல்வி நல்ல நிலையை அடைதல், பணவரவு தேவைகள் பூர்த்தியாதல் புதுவரவு இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிப்ப்ரவரி – ஏப்ரல் கொஞ்சம் நிதானம் தேவை, விட்டுக்கொடுத்து போவது உறவினர்களை அரவணைத்து செல்லுதல் நன்மை தரும்.
ஆரோக்கியம். பொதுவாக வியாதிகள் குறைந்து மனம் ஆறுதல் அடையும். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நாள்பட்ட வியாதிகள் குணம் அடைய ஆரம்பிக்கும். தாய் தந்தையர் நிலை டிசம்பர் 16 – ஜனவரி 15 வரை கொஞ்சம் கவனம் தேவை தகுந்த வைத்திய ஆலோசனை படி நடக்கவும். பெரிய மருத்துவ செலவுகள் இருக்காது.
உத்தியோகம் : நீதித்துறை, வங்கி, பண பரிவர்த்தனை செய்பவர்கள், நகைக்கடைவேலை, மற்றும் கணக்கு, ஆசிரியர், போன்றோர்களுக்கு சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மற்ற துறையினருக்கும் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் குரு மற்றும் பத்துக்குடையவர்கள் சுபமாகவும் நல்ல இடத்திலும் இருந்தால் இந்த குருபெயர்ச்சி நன்மைகளை அதிகம் செய்யும். மற்ற கிரஹங்களும் ஓரளவு அனுகூலமாக இருப்பதால் பெரிய கெடுதல்கள் வேலை இழப்பு வருமான இழப்பு இருக்காது.
சொந்த தொழில்/வியாபாரம் : கொடுக்கல் வாங்கல், பணம் வட்டிக்கு விடுவோர், நகை ஆடை, ஷேர் மார்க்கெட், கலைத்துறை, எழுத்து துறை போன்ற தொழில் செய்வோர் இரும்பு எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ் மீடியா போன்ற தொழில் செய்வோர் வருவாய் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவர், தொழில் விஸ்தரிப்பு இருக்கும். சொத்துக்கள் சேர்ப்பர், வங்கி கடன், அரசு உதவிகள் இருக்கும். ஏப்ரல் வரை பெரிய பிரச்சனைகள் இருக்காது போட்டிகளை சமாளிப்பீர்கள்.
விவசாயிகள் : புதிய நிலம் வாங்குவீர்கள், விளைச்சல் அதிகரித்து வருமானம் பெருகும். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கால்நடைகளால் நன்மை உண்டாகும். வழக்குகள் சாதகம் ஆகும். எல்லோருடனும் இனக்கமான சூழல் இருக்கும். பக்தி கூடும்.
அரசியல்வாதிகள் : எதிர்பார்த்த பதவி, செல்வாக்கு, தொண்டர்கள் ஆதரவு இருக்கும். வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை. டிசம்பர் 16 – பிப்ரவரி 12 வரை கவனம் தேவை, அவசரப்படுதல் கூடாது. பணம் விரயம் ஆகலாம். ஆனால் பொறுமை காத்தால் பேர் புகழ், பதவி அந்தஸ்து என்று கிடைக்கும்.
மாணவர்கள் : புதன் பிப்ரவரி வரை சாதகம், குருவின் பார்வைபலமும் நன்று அதனால் மதிப்பெண்கள் கூடும் விரும்பிய கல்லூரி, பள்ளி கிடைக்கும், நல்ல நட்பால் பெற்றோர் ஆசிரியர்கள் பாராட்டை பெறுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். பிப்ரவரிக்கு பின் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சொல்படி நடக்கவும்.
திருமணம் : திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் மேஷராசி அன்பர்களுக்கு வரன் அமைந்துவிடும்.
குழந்தை பாக்கியம் : சிலருக்கு இந்த குருப்பெயர்ச்சி 4-1/2 மாத்ததில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பெண்கள் : மேஷராசி பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பர். குடும்பம் கணவர் குழந்தைகள் உறவுகள் அக்கம்பக்கத்தார் நல்ல நட்பு இருக்கும். நினைத்தது நடக்கும். உத்தியோகஸ்தர்கள், சொந்த தொழில் செய்வோர், என்று எல்லோருக்கும் நல்ல சந்தோஷம் உண்டாகும். பெரிய பிரச்சனைகள் இருக்காது யாத்திரைகள் விருந்து கேளிக்கைகள், திருமணத்தை எதிர்பார்த்தோருக்கு வரன் அமைதல் குழந்தை பாக்கியம் என்று நன்றாக இருக்கும்.
ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.
குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block1, Alsa Green Park Appartment
Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
Chrompet, Chennai – 600 044
Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
Email : [email protected].
தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…!
https://dhinasari.com/astrology/guru-peyarchchi
You have not quoted your charges for astrological consultation/