Author: Dhinasari Reporter
Breaking News
சொந்த மாநிலத்தவரையே அடித்துத் துரத்திய கேரள போலீஸ்: உணவளித்து காப்பாற்றும் தமிழக போலீஸ்!
வெகு தொலைவு நடந்து வந்த அந்த நபரை தமிழக போலீசார் இருக்க இடம் கொடுத்து பசிக்கு உணவும் அளித்து காப்பாற்றினர். மனதை உருக்கும் இந்தச் சம்பவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நடைபெற்றுள்ளது.
இரண்டாவது நாளாக … ஊரடங்கால் முடங்கிய மதுரை!
முழு ஊரடங்கால் இரண்டாவது நாளாக மதுரை முடங்கியுள்ளது. நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கால், மதுரை மாநகரில் இரண்டாவது நாளாக மக்கள் நடமாட்டம் இன்றி வீடுகளுக்குள் முடங்கினர்.
ஆரியங்காவில் விபத்து; கேரளம் செல்லும் அத்தியாவசியப் பொருள்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்!
இதனால் தமிழகத்தில் இருந்து அத்தியாவசியமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தென்காசி மாவட்டம் புளியரையில் நிறுத்தி வைக்கப் பட்டன.
மகா., சாதுக்கள் படுகொலையில்… துறவியர் சங்கம் எடுக்கும் முடிவை ஏற்போம்: ஆர்எஸ்எஸ்., தலைவர்!
ஆர்.எஸ். எஸ்., ஸ்வயம்சேவகர்கள் ஷாகாக்களில் கலந்து கொண்டு உடற்பயிற்சிகள் மனப்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போதைய கொரோனா சூழலில், அனைவரும் தங்கள் இடங்களில் இருந்து கொண்டே இவற்றை மேற்கொள்ளலாம்
தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 24 ஆக உயர்வு!
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதியானது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா இல்லாத நகராக செங்கோட்டை! பாதுகாக்க இன்று முழு ஊரடங்கு!
கொரோனா வைரஸ் கிருமித் தொற்று இல்லாத நகரமாக செங்கோட்டை தொடர்வதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு! வெறிச்சோடிய மதுரை!
மதுரை மாவட்ட நிர்வாகம் காலை 9…மணி வரை சிறிய கடைகளை திறக்க அனுமதித்து, பால், காய்கறிகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து முன்வைக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று வெளுத்து வாங்கிய கனமழை மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கோவில் நிதியில் ஏழைகளுக்கு நேரடியாக அன்னதானம் வழங்க வேண்டும்: ராம.கோபாலன்!
கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்த பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சுட்டெரிக்கும் வெயில்! தள்ளாடும் ஊரடங்கு! அல்லாடும் மதுரை!
மதுரை நகரில் இன்று காலை முதலே கடைகளுக்கு மக்கள் அத்தியவசிய பொருட்கள் வாங்க படையெடுத்து வருகின்றனர். .
வறுமையில் தவிக்கும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு உதவாத அறநிலையத்துறை: ஸ்ரீவி. ஜீயர் வருத்தம்!
ஏழ்மை நிலையில் வாடும் கிராம கோவில் பூசாரிகளுக்கும், பட்டர்களுக்கும், குருக்களுக்கும் அந்த நிதியைப் பயன்படுத்தவும், மேலும் திருக்கோவில்களில் உள்ள சுவாமிகளுக்கு நைவேத்தியம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கவும் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும்
தில்லியில் உயிரிழந்த புலி; கொரோனா சோதனைக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு!
உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த புலி ஒன்று, தில்லியில் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக அது உயிரிழந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள புலியின் உடற்கூறுகள் கொரோனா சோதனைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.
