June 24, 2021, 11:06 pm
More

  ARTICLE - SECTIONS

  ரீல் ரஜினியின் ரியல் படம்… ‘விசுவாச துரோகம்’!

  பாசத்தலைவன் பாராட்டு விழாவில் நீங்கள் எப்படியெல்லாம் வாழ்த்தி பேசப்போகிறீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கும்

  rajini - 1

  நடுநிலை தமிழக இந்துக்கள் எல்லாம் ஜெ மறைவுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக முகநூல் காவிகள் மற்றும் களப்பணி காவிகள் மூலம் பிஜேபி பக்கம் சாயும் மனநிலையில் இருந்தனர்..

  அப்போது தான் யாருமே எதிர்பாராத வண்ணம் 2017 டிசம்பரில் திராவிடத்தை கருவறுக்க வந்த விடிவெள்ளியாய் களமிறங்கினார் ஒருவர்..

  பிஜேபி பக்கம் போகலாமா என குழப்பத்தில் இருந்த அத்தனை நடுநிலை இந்துக்களிடமும் “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- நீயெனக்கு ஓட்டு மட்டும் தா” என்றார்..

  அவர் சொன்ன ஆன்மீக அரசியல் தான் இத்தனை ஆண்டுகளும் நாம் தேடித்தீர்த்த மாற்று வழி என்று ஒவ்வொரு தமிழக இந்துவும் ஆடித்தீர்த்தான்.. ரசிகனோ 25 வருட தவத்தின் வரத்தைக் கொண்டாடித்தீரத்தான்..

  rajini gives money to cm fund
  rajini gives money to cm fund

  இனி பிஜேபி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை.. ரஜினி இருக்க இனி நக்சல் திராவிட கூட்டங்களுக்கு வேலையில்லை என்று மொத்த தமிழ்நாடும் மகிழ்ந்து துடித்தது..

  பிஜேபி பக்கம் சாய இருந்த இந்துக்கள் எல்லாம் போர் வரும் போது ரஜினியோடு களம் காண காத்திருந்தனர்..

  பிஜேபி இந்த இடத்தில் குழம்பித்தான் போனது..

  ஏற்கனவே கட்சியை வளர்க்க கிடைத்தவாய்ப்பை எல்லாம் வீணடித்து விட்டதாலும் ரஜினி ஆதரவளிப்பார் சில பல எம்எல்ஏக்களை சட்ட சபைக்கு அனுப்பி விடலாம் என இலவு காத்தகிளியாக காத்திருந்ததாலும் தேர்தலை எப்படி சந்திக்கலாம் என திருதிரு வென விழித்தது..

  அதற்குள் சமூக பிரச்சனைகளுக்கெல்லாம் அறிக்கை விட்டு தன் அரசியல் வண்டியை டாப் கியருக்கு மாற்றியிருந்தார் ரஜினி..

  போர்வரும் காலம் நெருங்கிகொண்டே வந்தது
  அந்த நாளும் வந்தது..

  2020 டிசம்பர் மாதம் 31 ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்கப்போகிறேன் என்றதும் மொத்த தமிழ்நாடும் பரபரப்பானது..

  சொல்லிவிட்டு அண்ணாத்த ஷுட்டிங் போனார்

  அய்யோ கொரோனா காலத்தில் ஷுட்டிங் போகிறாரே எந்த தொற்றுக்கும் ஆளாகிவிடக்கூடாதே என நான் உட்பட எல்லோரும் பதறினோம்..

  இவர் பிஜேபியோடு சேர வாய்ப்பில்லை அதே சமயம் கட்சி ஆரம்பிப்பதும் உறுதியானதும் பாஜ அதிமுக தோளை இறுகப்பற்றிக்கொண்டது..

  திமுக தரப்பிலோ மயான அமைதி..

  rajini-arjunamurthi
  rajini-arjunamurthi

  ஸ்டாலின் முதல்வர் கனவு வெறும் கனவாகவே போனது என இந்துக்கள் பேரானந்தம் கொண்டனர்..

  நாடகத்தின் உச்ச காட்சியில் தான் அத்தனையும் மாறியது

  யாருமே எதிர்பார்க்காத வகையில் கொரோனா மற்றும் உடல்நிலை காரணம்காட்டி அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்தார் ரஜினி..

  ரசிகர்களும் ஆன்மீக அரசியலால் திராவிடம் ஒழியும் என்று நம்பிய மொத்த இந்துக்களும் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்..

  rajinikanth
  rajinikanth

  அவர் வந்தால் அவருக்குத்தான் ஓட்டு என்று காத்திருந்த அத்தனை நடுநிலை இந்துக்களும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்..

  அதுவரை மடத்தனமாக அரசியல் செய்த தமிழக பிஜேபியும் அந்த நடுநிலைகளை தங்களை நோக்கி மடைமாற்றம்செய்யும் காலம் முடிந்து போனதை உணர்ந்தனர்..

  நடுநிலைகளும் சரி இனி பிஜேபி பக்கம் போகலாம் என்று நினக்கையில் ரஜினிக்காக காத்திருந்த 2017-2020 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மோடியை மிக மோசமாக சித்தரித்து வைத்திருந்ததை நம்பி விட்டதால் பிஜேபி பக்கம்போகும் முடிவையும் சுத்தமாக கைவிட்டனர்..

  அதற்கு பிறகு அதிமுகவின் தவறான எலக்சன் ஸ்ட்ராடஜியும் திமுகவுக்கு பலமான சாதகத்தை உருவாக்கவே
  அதன்பின் இறங்கி ஆடியது திமுக..

  rajini modi - 2

  முதல்வன் படத்தில் ரகுவரன் கேரக்டர் கருணாநிதியை ஒத்திருப்பதால் அதில் தான் நடித்தால் அவரை அது புண்படுத்தும் என்பதாலயே மறுத்த ரஜினி காலா படத்தில் நானாபடேகர் கேரக்டர் மோடியை ஒத்திருப்பது தெரிந்தே நடித்தார்..

  அப்போதும் யாரும் உணரவில்லை அவரது திட்டத்தை.. நான் உட்பட..

  இப்படி தான் ஆன்மீக அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னதன் முலம் பாஜகவுக்கு போக இருந்த இந்துக்களை கடைசிவரை போகவிடாமல் தடுத்துக்கொண்டே வந்து கடைசி நேரத்தில் சட்டென ஒதுங்கியதன் மூலம் திமுகவுக்கு பெரிய ஓட்டு வங்கியை அப்படியே தூக்கி கொடுத்தார்..

  96 ஐ போல நேரடியாக திமுகவை ஆதரிக்க முடியாததால் வேறு வடிவத்தில் வந்து ஓட்டுக்களை திமுகவுக்கு அள்ளிக்கொடுத்தார் ரஜினி..

  இதெல்லாமே ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று தான்..

  amitsha-rajini
  amitsha-rajini

  ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா கார்த்தி சித்தார்த் விஜய்சேதுபதி மற்றும் வெற்றிமாறன் ரஞ்சித் போன்ற நக்சல் டைரக்டர்கள் உட்பட திரைத்துறை அனைத்தும் திமுகவை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைக்க விதவிதமான வடிவங்களில் களமாடினர்..

  திமுக பக்காவாக திரைத்துறையை மறைமுகமாக களமிறக்கி ஜெயித்துக்காட்டியது..

  ஸ்டாலினை முந்திக்கொண்டு சினிமா குரூப் வாழ்த்திய விதங்களை பார்ததாலே இதை உணரலாம்..

  மிக கச்சிதமாக திமுகவை ஆட்சிக்கு வரவைத்த ரஜினியை பற்றி முகநூல் பிரபலம் அண்ணன் இந்தியதேவன் சில வருடங்களுக்கு முன்பே மிகச்சரியாக கணித்து ஒரு வார்த்தை சொன்னார்

  ரஜினி இன்னொரு கருணாநிதி இந்துக்கள் நம்பாதீர்கள் என்று..

  நான் உட்பட யாருமே அவரது கருத்தை நம்பவில்லை.. அத்தனை கச்சிதமாக இருந்தது ரஜினியின் நடிப்பு..

  rajinikanth-int
  rajinikanth-int

  இதோ மம்தா ஜெயித்ததும் வாழ்த்து சொன்ன ரஜினி அசாம் பிஜேபி முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை

  இன்று மற்றொரு நவகாளி ஆகும் வங்கத்தை கண்டித்தும் அறிக்கை இல்லை

  அண்ணாத்தே முடிந்ததும் மீண்டும் சன்பிக்சர்ஸிஸ் அடுத்த படம் உறுதியாகலாம்..

  இனிமேலும் யாரும் நம்பி விடாதீர்கள் இந்த திமுக நாடக கம்பெனியின் நிரந்தர ஆர்டிஸ்ட்டை..

  அழகாக தன்னை நோக்கி கூட்டத்தை வரவைத்து நகராமல் இருக்க வைத்து அப்படியே வேறுபக்கம் மடை மாற்றி மொத்த அதிமுக பிஜேபியையும் சாய்த்ததை பார்க்கும்போது அவரது பாடலே தான் நினைவுக்கு வருகிறது

  “ங்கொப்பனுக்கும் பே பே உங்க பாட்டனுக்கும் பே பே”
  மொத்தமாக பெப்பே காட்டிவிட்டார்..

  rajini-going-to-shooting
  rajini-going-to-shooting

  இதோ கொரோனா தீவிரமாகி கொண்டு இருக்கிறது. ஷுட்டிங்கில் பிசியாக இருக்கிறார் சூப்பர்ஸ்டார்

  படம் ரிலீசாகி கோடிகளை குவிக்க வாழ்த்துகள்..
  ஒடம்ப பத்திரமா பாத்துகோங்க ரஜினி..

  பாசத்தலைவன் பாராட்டு விழாவில் நீங்கள் எப்படியெல்லாம் வாழ்த்தி பேசப்போகிறீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கும்

  • தேசபக்தன்
   இளஞ்சேரலாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,264FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-