
கேரளாவின் அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் ஏன் இடம் கொடுக்கவில்லை என நடிகைகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற் கிறார்.
மார்க்சிஸ்ட் சார்பில் அமைச்சர்களாக பதவியேற்போர் பட்டியலில் கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பாராட்டு பெற்ற கே.கே.ஷைலஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடமளிக்கவில்லை.

ஆனால், அமைச்சரவையில் முதல்வர் பினராயி மருமகன் முகமது ரியாசுக்கு இடமளிக்கப் பட்டுள்ளது. இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷைலஜா டீச்சர், நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட சைலஜா டீச்சர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
முதல்வர் பினராயி விஜயனின் முந்தைய ஆட்சியின் போது சுகாதாரத் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த பெரிதும் போராடியவர் இவர்.
இதனால் மக்களிடத்தில் #BringBackShailajaTeacher எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் திரைத்துறையை சேர்ந்த நடிகைகளான பார்வதி மேனன், மாளவிகா மோகனன், அனுபமா ஆகியோர் ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் போரில் சிறப்பான பணியாற்றி வந்த சைலஜா டீச்சருக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லாதது ஏன்? என முதல்வர் பினராயி விஜயனுக்கே நேரடியாக டேக் செய்து கேள்வி எழுப்பி உள்ளார் மாளவிகா மோகனன்.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ். ராஜேஷ் கூறுகையில், ”அமைச்சரவையில் இருந்தால்தான் அரசியல் நடவடிக் கைகளில் முக்கியத்துவம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியில் இல்லை. கட்சி பொறுப்பு அளிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
அதனால்தான் ஷைலஜாவுக்கு சட்டப்பேரவையில் கட்சியின் கொறடா பொறுப்பு அளிக்கப் பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் என்பதற்காக முகமது ரியாசுக்கு அமைச்சர பதவி வழங்கப்படவில்லை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) தலைவராக இருக்கும் முகமது ரியாஸ் கட்சிக்காக பெரிதும் பங்களித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
So one of the best health ministers we’ve ever had @shailajateacher got dropped from the cabinet mid-pandemic?! What exactly happened there @vijayanpinarayi ?
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2021



