கரும்பூஞ்சைக்கு தொற்று: தூத்துக்குடியில் முதல் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
corona last rites
corona last rites

கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சிலருக்கு கரும்பூஞ்ஜை தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்

மியூகோமைகோசிஸ்’ அல்லது ‘கருப்பு பூஞ்சை தொற்று’ என்கிற அபாயகரமான நோய் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த நபர்களிடம் தான் இது காணப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் ஊக்க மருந்துகளை (Steroids) அதிக அளவில் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கே இது பரவுகிறது என தெரிகிறது.

மிக கொடூரமான இந்த புதிய வகை தொற்றினால் உயிரிழப்புகள் 50 -70 விழுக்காடு என்பதும், பலரின் கண்களை நீக்கும் நிலையை அடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகையால் கொரோனா தொற்று உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்துகளையும் உட்கொள்வது அபாயகரமாகிறது. எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், நீரழிவு நோய் மற்றும் புற்று நோய் உள்ள கொரோனா நோயாளிகளையே இது தாக்குகிறது.

தெலுங்கானா மாநிலமும், இந்த கரும் பூஞ்சையை கவலையளிக்கும் நோய் பரவலாக அறிவித்துள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் நபராக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நோயாளிகள் எண்ணிக்கை உயர்வை தொடர்ந்து ஆங்காங்கே தற்காலிகமான கொரோனா மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டியில் வெல்டிங் பட்டரை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா ஏற்பட்டது. 57 வயதான இவர், உடல்நிலை மோசமானதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொரோனாவில் மீண்டு வராத இவர் சில தினங்களுக்கு முன் கரும் பூஞ்சை தொற்று காரணமாகவும் பாதிக்கப்பட்டார்.

கரும் பூஞ்சை தொற்று மற்றும் கொரோனா இரண்டுக்கும் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கரும் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் பலியாக இது கருதப்படுகிறது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

அந்த வகையில், தமிழகத்தில் முதன் முறையாக கரும்பூஞ்ஜை தொற்றக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.