
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்தி 63 ஆயிரம் கடன் உள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
“தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் 1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.
1200 கோடி ரூபாய் மின்வாரியம் மாநகராட்சிகளுக்கு செலுத்தாமல் உள்ளது.
போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன்” என்றார்.
குறிப்பு;2011ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் திமுக விட்டுச் சென்றிருக்கிறது என்று கூறினார். ஆனால் 2021 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பன்னீர்செல்வம் கடன் தொகை ரூ. 5 லட்சம் கோடி என்று அறிவித்தார்.
எனவே கடந்தகால அறிக்கைகளை தேடி எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் திமுக – அதிமுக இடையில் தமிழ்நாட்டின் கடனை அதிகரிப்பதில் ஒரு போட்டி இருந்தது தெளிவாகிறது.. தமிழ்நாட்டின் கடன் சுமையை பெருக்குவதில் திமுக -அதிமுக ஆகிய 2 கட்சிகளின் இலவசத் திட்டங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதை மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது..
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுத்து கருணாநிதி இலவசத் திட்டங்களுக்கு வழிகாட்டினார் என்றால் அதில் ஜெயலலிதா புதிய வரலாறு படைத்துவிட்டார்.. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி என்று ஒவ்வொரு தேர்தலிலும் இலவசங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இலவசமாக இருசக்கர தானியங்கி வாகனமும் கொடுத்தாகி விட்டது . இனி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆல்டோ கார் தான் இலவசமாக தர வேண்டும்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் அவர்களே, தேவையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு, மட்டுமே இலவசங்களை கொடுங்கள். உதவி செய்தால் போதும். இலவசங்கள் வேண்டாம். வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள்..
ஒவ்வொரு இலவச திட்டத்தையும் மறு ஆய்வு செய்யுங்கள். இனியும் இலவசம், இலவசம் என்று சகட்டுமேனிக்கு அறிவிப்புகளை வெளியிட்டால் இனியும் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குதான் செல்லும்.
வாய்க்கு வந்த படி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அதை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் இந்த சூழலில், வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக கூறிமக்களை ஏமாற்றாதீர்கள்.
ஒட்டுக்காக இலவசங்களை அறிவித்து அப்பாவி மக்களின் ஒட்டுக்களை பெற்று ஆட்சியை பிடித்தப்பின் வெள்ளை அறிக்கை என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி,அதிமுக ஆட்சியை குற்றம் சொல்லி தப்பிக்க நினைக்கும் நீங்கள்;போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன் என கூறும் உங்களுக்கு அறிவு இருந்தால் பெண்கள் அனைவருக்கும் இலவச பயணம் என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன..?புத்தியுள்ள முதல்வரோ,நிதி மந்திரியோ செய்யும் வேலையா இது..?
உங்கள் கோமாளிதனத்தால் தமிழகமக்கள் தலையில் கடனை சுமத்திவிட்டு இதில் வெள்ளை அறிக்கை ஒரு கேடு..
- ராஜப்பா தஞ்சை