குடியரசு தின அணிவகுப்பு சர்ச்சை; தமிழகம் புறக்கணிக்கப்பட்டதா?

Published:

republic day parade - 2026
படம் : 2020-ல் தமிழகம் சார்பாக குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொண்ட வாகனம். (இணையத்திலிருந்து எடுத்தது).

ஒவ்வொரு வருட குடியரசுதின அணிவகுப்பிற்காக , செப்டம்பர் மாதத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து, எல்லா மாநில வாகனங்களுக்கும் முறையான அழைப்பும், அந்த வருடத்திற்கான “கரு”வும் கொடுத்து அணிவகுப்பிற்கு அழைக்கப்படுவர். இது மரபு.

அது போலவே இந்த வருட அணிவகுப்பிற்காக கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி எல்லா மாநிலத்திற்கும் அழைப்பு அனுப்பினார்கள். அதனை ஏற்றுக் கொண்ட எல்லா மாநிலங்களும், கொடுக்கப்பட்ட கருவிற்கேற்ப (Theme) தங்களது “மாதிரி வடிவமைப்பை” அனுப்பி வைத்தன. தமிழகம் உட்பட.

கொடுக்கப்பட்ட “கரு”கள். (Themes) India@75, Actions @ 75, Resolve @ 75 , Achievements @ 75, and Ideas @ 75.
இப்படியான கருகளை என்னென்ன வகைகளிலெல்லாம் உருவாக்கலாம், என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் போன்ற வழிகாட்டுதலை பாதுகாப்பு அமைச்சகம் அளித்திருந்தது. அதன்படி மட்டுமே வாகனங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
அணிவகுப்பு வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு ஒன்று உண்டு. அதில், கலை, இலக்கியம், சிற்பம், ஓவியம், கலாச்சாரம், இசை, கட்டிடக்கலை உட்பட பல துறைகளின் நிபுனர்கள் இருப்பர். அந்தக் குழுவினரே மாநிலங்கள் சமர்ப்பித்திருக்கும் வாகன வடிவமைப்புத் திட்டங்களைக் கொண்டு இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் அவர்கள் முடிவே இறுதியானது என்றும் அழைப்புக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருக்கும்.

அப்படி உருவாக்கப்பட்டு வரும் வாகனங்களில், ஆகச் சிறந்த முதல் 12 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு வாகனங்களை மட்டுமே அணிவகுப்பில் தேர்வானது. (அதாவது, இது கிட்டத்தட்ட பள்ளி கல்லூரியில் நடத்தப்படும் போட்டி போன்றது தான். )

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

வாகனத் தேர்வில் முதல் பன்னிரண்டு இடத்திற்குள் வர முடியாமல் போனதால், 28 மாநிலத்தில் தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டன.

2016ம் ஆண்டு, குடியரசுதின அணிவகுப்பு வாகன முகப்பில் அந்நாள் முதல்வர் செல்வி. ஜெயல்லிதா அவர்களின் உருவப் படம் இருந்த்தால், கடைசி நேரத்தில் தமிழக வாகனம் அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்ட்து.

அடுத்த ஆண்டு தமிழகம் வாகனத்தைச் சிறப்பாக வடிவமைத்து அணிவகுப்பில் கலந்து கொள்ள வாழ்த்துவோம்.

#உறுமி @narendramodi @dhinasarinews

letter from rajnath singh - 2026

பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழ்நாட்டிற்க்கு அனுப்பப்பட்ட கடிதம் இதோ..

ஆக இந்த வருடம் 29 மாநிலம் மற்றும் உனியன் பிரதேசங்களில் இருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டது..ஆனால் அவற்றில் 12 தான் இறுதியில் பாதுகாப்புதுறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டது..

மீதமுள்ள 17 மாநிலம் மற்றும் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படவில்லை..அந்த மாநிலங்கள் எல்லாம் பொங்காத போது, இங்கே முட்டுச் சந்து போராளிஸ் மட்டும் அரசியல் செய்யும் விதத்தை பார்க்க வேடிக்கையாக உள்ளது..

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சரி அதைக்கூட விடுவோம், 2015 மற்றும் 2018 ம் ஆண்டு தமிழகத்தின் ஊர்திகள் இடம் பெறவில்லை.அப்ப கூட போராளிஸ் வாய் திறக்கவில்லை. இப்ப மட்டும் கதறுவதை பார்த்தால் நன்றாக தெரிகிறது அரசியல் செய்கிறார்கள் என்று..

இத்தாலி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட தமிழக ஊர்திகள் குடியரசு தின அணி வகுப்புக்கு சில வருடங்கள் தேர்வாகவில்லை..

சொல்லப்போனால் கடந்த 8 வருடத்தில் தமிழக ஊர்திகள் 6 முறை இடம்பெற்றது. கேரள ஊர்தியோ 2018, 2021 என 2 முறையும், ஆந்திர ஊர்தி 2015, 2020 & 2021 என 3 முறையும் மட்டுமே இடம்பெற்றன. காரணம் தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி தான் இவை இடம்பெற்றது.மற்ற மாநிலங்கள் இடம் பெறவில்லை..

இவர்களது பிரிவினை எனும் நஞ்சை விதைக்க இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளனர் முட்டுச் சந்து போராளிஸ்.

Related articles

Recent articles

spot_img