டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்: அம்சங்கள்..!

Published:

ear buds - 2026

இந்திய சந்தையில் சோனி இந்தியா நிறுவனம் டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய இயர்பட்ஸ் தனித்துவம் மிக்க சௌகரிய அனுபவம் வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பிளாக், வைட், ஆரஞ்சு மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 5990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இயர்பட்ஸ் அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை, ஏராளமான கஸ்டமைசேஷன் வசதியுடன் வழங்குகிறது. இத்துடன் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது.

சோனி டபிள்யூ.எப். சி500-ல் 5.8 எம்.எம். டிரைவர் யூனிட், ஃபாஸ்ட் பேர், ஸ்விஃப்ட் பேர், ப்ளூடூத் 5, அதிக தரமுள்ள பில்ட்-இன் மைக்ரோபோன், வாட்டர் ரெசிஸ்டண்ட், 10 மணி நேர பேக்கப், சார்ஜிங் கேஸ் சேர்த்தால் மொத்தம் 20 மணி நேர பேக்கப், – டபிள்யூ.எப். சி500 பட்டன் மூலம் ஸ்மார்ட்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Related articles

Recent articles

spot_img